ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவாவின் வீடியோ வைரல்!!

0
126

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவாவின் வீடியோ வைரல்!!

இந்திய சினிமாவின் முன்னனி நடன இயக்குனராக வலம் வரும் பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா – தனுஷின் திருமண உறவு முடிந்த நிலையில் ஐஸ்வரியா தற்போது தனது இயக்குனர் வேலைகளில் ஆர்வம் காட்டி வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. அதன்படி ஐஸ்வர்யா தனது பயணி மியூசிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்து இருந்தார். மேலும் இப்பாடல் தமிழ், தெலுங்கு , மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத் , மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கிரித் திவாரி என இசைக்கலைஞர்கள் பாடியுள்ளனர்.

இப்பாடல் ஆனது விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டி வருகின்றனர். இதனிடையில் பிரபுதேவா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தியும், நெகிழ்ந்து பேசியும் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.