ஐயப்பனின் மார்கழி மாத வழிபாடு பிரதானம் சொல்லும் படம் ‘மாளிகப்புரம்’
சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ‘காந்தாரா’ படத்தைப் போல், தற்போது மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ‘மாளிகப்புரம்’ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தமிழில் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகிறது. மக்களிடத்தில் இதன் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.
‘மாளிகப்புரம்’ படத்தில் ஐயப்பனின் மார்கழி மாத வழிபாடு பிரதானம். ஆன்மீகமும், அறிவியலும், நம்பிக்கையும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதை சொல்லுவது தான் இப்படம்.
‘மாளிகப்புரம்’ படம், ஒரு குடும்பத்தின் பிரச்னையை ஆன்மீக வழியாக பார்க்கிறது.
‘கடவுள் மனித ரூபத்தில் வந்து மனிதர்களுக்கு உதவி செய்வான்’ என்பது ஆன்மீகம்.
‘தகுந்த நேரத்தில் சகமனிதர்களுக்கு உதவி செய்பவன் கடவுள்’ என்று சொல்கிறது நம்பிக்கை.
இரண்டுக்குமான இடைவெளி, ஒரு மெல்லிய நூலிழை அதன் வழியாக பயணிக்கிறது, ‘மாளிகப்புரம்’.

பெரிதும் வரவேற்பு இல்லாமல் சாதாரணமாக இப்படம் வெளியாகி, இப்போது பட்டி தொட்டியெங்கும் குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்த்து வருகிறார்கள்.
படத்தை கமர்சியலாகவும்.. ஹீரோயிசமாகவும் உருவாகியதுதான் இதன் பலம்.
இப்படத்தை புதுமுக இயக்குனர் விஷ்ணு சசிசங்கர் இயக்கி பெரும் வெற்றிக் கண்டுள்ளார். இவர், AVM தயாரித்து, சூர்யா-ஜோதிகா நடித்த #பேரழகன் படத்தை டைரக்ட் செய்த சசிசங்கர் மகன் ஆவார்.
நாயகனாக உன்னி முகுந்தன் நடித்துள்ளார். இவர், தனுஷ் நடித்த #சீடன் படத்தில் அறிமுகமானவர். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த #யசோதா படத்தில் நடித்திக்கிறார். முக்கிய கதாபாத்திரமாக குழந்தை நட்சத்திரம் பேபி தேவானந்தா நடித்து அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர்களுடன் சம்பத்ராம், மனோஜ் கே.ஜெயன், மாஸ்டர் ஸ்ரீபத், டி.ஜி.ரவி, சைஜிகுருப், அஜய் வாசுதேவ், ஸ்ரீஜித்ரவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இதில் இரண்டு பாடல்களை பிரபல இயக்குனர்
R.V.உதயகுமார் எழுதியுள்ளார்.
ஒரு பாடலை இயக்குனர் யார் கண்ணன் எழுதியுள்ளார்.
இயக்கம் : விஷ்ணு சசிசங்கர்.
தயாரிப்பு : பிரியா வேணு – நீட்டா பிண்டோ.
கதை,திரைக்கதை: அபிலாஷ் பிள்ளை.
ஒளிப்பதிவு : விஷ்ணு நாராயணன்.
இசை: ரானின்ராஜ்.
எடிட்டிங் : சமீர் முகமது.
வசனம் : கலைமாமணி வி.பிரபாகர்
சவுண்ட் டிசைனர் : எம்.ஆர். ராஜாகிருஷ்ணன்
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,
நடனம்: ஷெரிப்
பாடல்கள்: இயக்குனர் R.V. உதயகுமார்,
இயக்குனர் கண்ணன்,முருகானந்தம், பல்லவிகுமார்,கோவை சிவா.
பாடியவர்கள் : பிரசன்னா / வேல்முருகன் / பிரபாகர் /அஜீம்ராஜா / காயத்ரி / ஏ.கே,ரமேஷ் / சி.அதிதீ
Tamil Nadu Release By #TridentArts Ravi.