ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  – கமல்ஹாசன், சிவகுமார் பங்கேற்பு

0
379

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  – கமல்ஹாசன், சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்பு

இந்தியாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் ஸ்டூடியோஸின் ஒரு பகுதி தற்போது சினிமா அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் ஸ்டூடியோஸ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. சமீபகாலமாக திரைப்படத் தயாரிப்பிலிருந்து இந்த நிறுவனம் விலகியுள்ளது. இறுதியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழ்ராக்கர்ஸ்’ என்ற வெப் தொடரை ஏவிஎம் தயாரித்திருந்தது.

இந்த நிலையில் ஸ்டூடியோவின் 3வது அரங்கில், ஆரம்பகால சினிமாவில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்களை கொண்ட ஹெரிடேஜ் அருங்காட்சியமாக ஏவிஎம் நிர்வாகம் மாற்றியுள்ளது. இதில் அரிய கேமராக்கள், பழங்கால கார்கள், சினிமா உபகரணங்கள், புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன்.

இந்த அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஏ.வி.எம்.சரவணன், அவரது மகன் குகன், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்

கடந்த 77 வருடங்களில் 178 படங்கள் வரை தயாரித்துள்ள ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. இந்தியாவிலேயே மிக பழமை வாய்ந்த நிறுவனமாக இருந்தாலும் ஏவிஎம் குடும்பம் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை கட்டமைத்து கொண்டு தனது பெருமையையும் புகழையும் தன்னிடத்தில் தக்க வைத்துள்ளது.

புதுமைகளை, படைப்புகளை வழங்குவதில் முன்னோடியாக இருந்த எங்களது நிறுவனர் திரு ஏ.வி மெய்யப்ப செட்டியார் அவர்களின் பாதச்சுவடுகளை பின்பற்றி ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. சினிமா வரலாறு மற்றும் பெருமையை கொண்டாடும் விதமாக அதேசமயம் கவனமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள். உபகரணங்கள் மற்றும் அரிதான இயந்திர சாதனங்கள் என இந்த மியூசியம் பார்வையாளர்களுக்கு ஏவிஎம் நிறுவனத்தின் பெருமை வாய்ந்த வரலாறை உடனடியாக உணரும் வாய்ப்பை கொடுக்கும்.

இந்திய திரையுலக வரலாற்றில் பல புதுமையான விஷயங்களை புகுத்தியதில் ஏவிஎம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பெருமை உண்டு. முதல் மொழிமாற்று திரைப்படம் ஹரிச்சந்திரா 1944), முதன்முறையாக பின்னணி பாடுவதை அறிமுகப்படுத்திய முதல் படம் (நந்தகுமார் 1938), இசைக்கு ஏற்ப பாடல்களில் பின்னர் உதட்டசைவை பொருத்தி கொள்ளும் முறையை கொண்டு வந்த முதல் படம் (ஸ்ரீவள்ளி 1945), பாடல்களே இல்லாமல் உருவான முதல் தமிழ் படம் (அந்த நாள் 1954), நடிகர்களை அனிமேஷன் உருவங்களுடன் இணைத்து உருவாக்கிய முதல் படம் (ராஜா சின்ன ரோஜா 1989), சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்காக ஜவஹர்லால் நேரு கோல்டு மெடல் விருது பெற்ற படம் (ஹம் பாஞ்சி ஏக் தால் கே இன் 1957), டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தை முதலில் பயன்படுத்திய படம் சிவாஜி 3D 2007) ஆகியவை நம் நிறுவனத்தின் புதுமைகளையும் மதிப்பீடுகளையும் புகுத்தியதற்கான சில சிறந்த உதாரணங்கள்.

திரு சி.என் அண்ணாதுரை, திரு மு.கருணாநிதி, திரு எம்.ஜி.ராமச்சந்திரன், திரு என்.டி.ராமராவ் மற்றும் டாக்டர். ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றிய பெருமையை ஏவிஎம் நிறுவனம் கொண்டுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு. மு.கருணாநிதி அவர்கள் எழுதிய வலிமையான கதை மற்றும் சீற்றம் மிகுந்த வசனங்களை கொண்டு ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் முகத்தையே மாற்றியது. அந்த படம் சமூகப்புரட்சியை ஏற்படுத்தியதுடன் திரைப்படங்களில் சமூகநீதி இருக்கவேண்டும் என்பதையும் அறிமுகப்படுத்தியது. இந்த புரட்சிகரமான படத்தில் வெற்றி வெற்றி வெற்றி’ என்கிற தனது முதல் வார்த்தைகளை பேசி நடிகராக அறிமுகமானார் புகழ் பெற்ற நடிகரான சிவாஜி கணேசன். அவரது முதல் காட்சி எடுக்கப்பட்ட அந்த பொன்னான தருணம் நினைவுச்சின்னமாக இந்த ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு நினைவு கூரப்பட்டுள்ளது.

வாய்ப்பை ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் பொதுமக்களுக்கு வழங்குகிறது. மேலும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம் மற்றும் எஜமான் ஆகிய படங்களில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் ஆடியோ, வீடியோ சாதனங்கள் வகைப்படுத்தப்பட்டிருப்பதை பார்வையாளர்கள் காண முடியும். மேலும் சிவாஜி படத்தில் அதிரடிக்காரன் என்கிற பாடலில் பயன்படுத்தப்பட்ட 1939 மாடல் வகையைச் சேர்ந்த MG TB கார், சந்தேகமே இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். அதுமட்டுமல்ல ‘சிவாஜி தி பாஸ்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று நடித்த மொட்டை பாஸ் சிலையும் சினிமா ஆர்வலர்களை ரொம்பவே குஷிப்படுத்தும்.

1910ல் இருந்து 2000 வரையிலான பழமையும் அழகும் வாய்ந்த 45 விதமான கார்கள், 20 விதமான பைக்குகள் மற்றும் இயந்திரங்கள் பார்வையாளர்களை ஆட்டோ மொபைல்களின் பொற்காலமாக திகழ்ந்த அந்த காலகட்டத்திற்கே அழைத்து செல்லும். டாக்டர் எம்.ஜி ராமச்சந்திரன், ஜெமினி ஸ்டுடியோஸ் அதிபர் திரு எஸ்.எஸ் வாசன் மற்றும் ஏ.வி மெய்யப்பன் செட்டியார் போன்ற ஜாம்பவான்கள் பயன்படுத்திய கார்களின் வடிவமைப்பையும் அதுகுறித்த பெருமை வாய்ந்த விபரங்களையும் கூட பார்த்து ரசிக்க முடியும்.

1886ன் வேலைப்பிரதியான பென்ஸ் பேடண்ட் மோட்டார்வாகன், உள் எரிப்பு இயந்திரத்தால் இயக்கப்படும் உலகின் முதல் ஆட்டோமொபைல் மற்றும் 1896 ஆம் ஆண்டில் ஹென்றி ஃபோர்டின் முதல் சோதனை ஆட்டோமொபைலான ஃபோர்டு குவாட்ரிசைக்கிள் ஆகியவை வாகன ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும்.

புதன்கிழமை முதல் திங்கட்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக இந்த மியூசியம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். செவ்வாய்க்கிழமை மற்றும் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் இந்த மியூசியம் மூடப்பட்டிருக்கும். இந்த மியூசியத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 200 ரூபாயும் சிறியவர்களுக்கு 150 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.