ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் – சமந்தா குறித்து சித்தார்த் மறைமுக பதிவு? சித்தார்த்தின் பதிவால் கடுப்பான நெட்டிசன்கள்.!!
சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமண முறிவு குறித்து அறிவித்துள்ள நிலையில், நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு டுவிட் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
One of the first lessons I learnt from a teacher in school…
"Cheaters never prosper."
What's yours?
— Siddharth (@Actor_Siddharth) October 2, 2021
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் என்பது சிறுவயதில் நான் ஆசிரியரிடம் கற்ற பாடங்களில் ஒன்று” என கூறியுள்ளார். சமந்தாவை மனதில் வைத்து தான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை காதலிப்பதற்கு முன்பாக நடிகர் சித்தார்த்தை காதலித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் பல்வேறு விழாக்களில் கூட ஒன்றாக வந்து கலந்து கொண்டனர். திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து தான் நாகசைதன்யாவுடன் காதல் வயப்பட்டு பின்னர் அவரையே சமந்தா திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.