ஏப்ரலில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

0
102

ஏப்ரலில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மீண்டும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்துள்ளனர். மற்றொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டுப் பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 11 ஆம் தேதி வெளியாகிறது என்றும் படம் ஏப்ரல் ரிலீஸ் என்றும் தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.