‘ஏசியன் பெயிண்ட்ஸ் வழங்கும் இதயம் இருக்குமிடம்’ சீசன் 4 இல் தமன்னா பாட்டியாவின் சரணாலயமாக இருக்கும் அவரது வீடு காட்டப்படவுள்ளது

0
232

ஏசியன் பெயிண்ட்ஸ் வழங்கும் இதயம் இருக்குமிடம்’ சீசன் 4 இல் தமன்னா பாட்டியாவின் சரணாலயமாக இருக்கும் அவரது வீடு காட்டப்படவுள்ளது

சென்னை, மார்ச் 19, 2021: தென்னிந்தியத் திரையுலகின் மிகவும் பிரபலமாக நடிகைகளில் ஒருவாரான, தமன்னா பாட்டியா ரசிகர்களின் மனங்களில் குடிகொண்டுள்ளார் மற்றும் ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். ‘ஏசியன் பெயிண்ட்ஸ் வழங்கும் இதயம் இருக்குமிடம்’ சீசன் 4 – ன் இந்த அத்தியாயத்தில், தான் திரைநட்சத்திரமாக இல்லாமல், ஒரு தாய்க்கு மகளாக இருக்கும், தனது தனிப்பட்ட சரணாலயமாகத் திகழும் தன்னுடைய வீட்டிற்கு, தமன்னா உங்களை அழைத்துச் செல்லவுள்ளார். படப்பிடிப்புகள் காரணமாக எப்போதும் பரபரப்பாகவும், பயணித்தபடியும் இருக்கும் அவர் வீட்டில் இருக்கும் நேரம் மிகவும் குறைவாகவே இருந்தாலும், அது அவர் எப்போதும் விரும்பும் நேரமாக இருக்கும். ஒரு திரைப்பட நடசத்திரமாக தன்னைச் சுற்றியிருக்கும் பரபரப்புகளையும் பிரச்சனைகளையும் மறந்து, ஓய்வாக இருக்கும் ஒரே இடமாக, ஒரு சரணாலயமாக அவரது வீடு திகழ்கிறது.

தமன்னாவின் வீடு அழகு மற்றும் எளிமையின் உச்சமாகும். ஆனால், அவரது குடும்பமே அதை ஒரு கட்டிடம் என்பதிலிருந்து ஒரு வீடாக மாற்றும் முக்கிய காரணமாகும். ஒரு தீனித்தின்னி என்று தன்னைத்தானே ஒப்புக்கொள்ளும் அவர், வீட்டிலிருக்கும் பெரும்பாலான நேரங்களில் சமையலறையிலும் உணவு உண்ணும் இடங்களிலும் தனது பெற்றோர்களுடன் தேனீர் மற்றும் சிற்றுண்டிகளைச் சாப்பிட்டபடி கழிக்கிறார். தனது தந்தை, பல ஆண்டுகளாக பார்த்துப் பார்த்து வீட்டை அலங்கரித்துள்ளதை அவர் கனிவோடு எடுத்துக்கூறுகிறார். பல முக்கிய நினைவுகள் தமன்னாவிற்கு இந்த வீட்டில் இருந்தாலும், முதல் முதலான தனக்கு ஒரு நாய்குட்டி பெற்ற சம்பவம் இன்னும் மனதில் பசுமையாக இருப்பதாகக் கூறுகிறார். பல்வேறு சிரமங்களுடன் பணியாற்றி, சோர்வுடன் வீட்டிற்குள் வரும்போது, துள்ளலாக வாலாட்டிக்கொண்டு ஓடிவரும் நாய்குட்டி தரும் அன்பிற்கு நிகர் வேறேதும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

ALSO READ:

Tamannaah Bhatia’s Home is her Sanctuary in‘Asian Paints WhereThe Heart Is’ Season 4

ஏசியன் பெயிண்ட்ஸ் வேர் தி ஹார்ட் இஸ் சீசன் 4 இன் நான்காவது அத்தியாயத்தில், அழகுப்பதுமை தமன்னாவின் வீட்டிற்குள் நுழையுங்கள்

ஏசியன் பெயிண்ட்ஸ் வழங்கும் இதயம் இருக்குமிடம் 4, அத்தியாயம் 4:

‘ஏசியன் பெயிண்ட்ஸ் வழங்கும் இதயம் இருக்குமிடம்’ சீசன் 4 பற்றி

‘ஏசியன் பெயிண்ட்ஸ் வழங்கும் இதயம் இருக்குமிடம்’ சீசன் 4 பார்வையாளர்களை மிகவும் புகழ்பெற்ற ஏழு பிரபலங்களின் ஏழு தனித்துவமான அழகான வீடுகளுக்கு ஒரு பிரத்யேக சுற்றுப்பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். இந்த ஆண்டு சங்கர் மகாதேவன், அனிதா டோங்ரே, ஸ்மிருதி மந்தனா, தமன்னா பாட்டியா, ராஜ்குமார் ராவ், பிரதீக் கௌஹாத் மற்றும் உடன்பிறப்புகள், சக்தி மற்றும் முக்தி மோகன் ஆகியோர் தங்களது கதவுகளைத் திறந்து, நினைவுகளைப் பகிர்ந்து பார்வையாளர்களுடன் உணர்ச்சி ரீதியாக இணையவுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில், 27 பிரபலங்களின் 22 வீடுகளை ஏசியன் பெயிண்ட்ஸ் காட்சிப்படுத்தியுள்ளது மற்றும் அவை, 250 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது, நிகழ்ச்சிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான பிணைப்பிற்கு சான்றாகும்.

சீசன் 4 நிகழ்ச்சியில் சில புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த சீசன் பிரபலங்கள் மற்றும் அவர்களது வீடுகளின் ஆடம்பர அலங்காரக் கதைகளை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும். ஒரு இடங்களுக்கான-முன்னுரிமை அணுகுமுறையுடன், பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தின் வீட்டைப் பார்ப்பார்கள்: இது அலங்கார நம்பிக்கையையோ அல்லது ஒரு சிறிய தேர்வையோ பிரதிபலிக்கும் எத்தகைய மாற்றமாக இருந்தாலும் இந்த புதிய பருவம் பிரபலங்களின் உண்மையான, வாழும் கூட்டினை வெளிப்படுத்துவதையும், அவர்களது உண்மையான சுயத்தையும் மற்றும் அடையாளத்தை பிரதிபலிக்கும் அம்சங்களைக் காட்சிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, பார்வையாளர்கள், ஊரடங்கின் போது பிரபலங்களின் அனுபவங்கள் மற்றும் தருணங்கள், அவர்களின் குடும்பம், ஒற்றுமை பற்றிய கருத்து மற்றும் இந்த புதிய உலகில் வீடுகள் குறித்த அவர்களது அர்த்தம் என்ன போன்றவற்றையும் அறிந்துகொள்ளலாம். இந்த நிகழ்ச்சி உறவுகளின் அழகையும், ஒரு வீட்டிற்கான பகிரப்பட்ட அன்பு எவ்வாறு பலப்படுத்துகிறது என்பதையும் மையமாகக் கொண்டிருக்கும். மேலும், தங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களிடமிருந்து, வீட்டை அலங்கரிப்பதற்கான சில உணர்ச்சிகரமான யோசனைகள் மற்றும் உதவிக்குறிப்புகளையும் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

சீசன் 4 பிரபலங்களின் தீவிர ரசிகர்களுக்காக ஒரு புதிய மற்றும் அற்புதமான அம்சத்தையும் வழங்குகிறது. இதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும், பிரபலங்களுக்குச் சொந்தமான ஒரு பொருள், வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசாக வழங்கப்படவுள்ளது.