எவ்வளவு காலம்தான் கொரோனா பயத்தோடு வாழ முடியும்? சினிமா பணிகளை தொடங்கிய அக்‌ஷய்குமார்

0
263

எவ்வளவு காலம்தான் கொரோனா பயத்தோடு வாழ முடியும்? சினிமா பணிகளை தொடங்கிய அக்‌ஷய்குமார்

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு முதல் ஆளாக சினிமா படப்பிடிப்பு பணிகளை தொடங்குகிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். அட்ரங்கி ரே, பெல்பாட்டம், ரக் ஷா பந்தன் போன்ற தனது படங்களின் பணிகளை தொடங்கவிருக்கிறார் இவர்.

இதுகுறித்து பேசும் அக் ஷய் குமார் கொரோனா குறித்த பயத்துடன்தான் ஆரம்ப காலங்களில் இருந்தேன். ஆனால் எவ்வளவு காலம்தான் பயத்துடன் வாழ முடியும். ஆரம்பத்தில், தொற்றுநோய் தொடங்கியபோது இந்த வைரஸைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.அது ஒரு நபரைப் பாதிக்கும் விதம் பற்றி அறிந்திருக்கவில்லை.இதனால் நிறைய பயம் இருந்தது. ஆனால் இப்போது உடலில் நல்ல நோயெதிர்ப்பு திறன் இருந்தால், கொரோனாவை வெல்ல முடியும் என்று அறிந்துள்ளோம். எனவே எனக்கு மட்டுமல்ல, எங்கள் குழு முழுமைக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டு மீண்டும் வேலைக்குச் செல்ல முடிவு செய்தேன்.