எமோஷனல் த்ரில்லரான ‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்: பிரம்மாண்டமாகத் தயாராகிறது

0
164

எமோஷனல் த்ரில்லரான ‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்: பிரம்மாண்டமாகத் தயாராகிறது

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரிக்கவுள்ளார். ‘மோகன்தாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. அப்போதே பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லரைக் காணவுள்ளோம் என்பதை உணர்த்தியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது.

‘மோகன்தாஸ்’ படத்தை ‘களவு’ படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படம்  ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும். பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு. இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு நாயகியாக தன் நடிப்பால் ஆச்சரியப்படுத்தி சமீபத்தில் கலைமாமணி விருதினை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன்பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன்,அக்‌ஷய் ராதாகிருஷ்ணன்,ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ‘மோகன் தாஸ்’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள விஷ்ணு விஷாலுக்கு அவருடைய திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ‘களவு’ படத்தில் தன்னுடைய பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார்  முரளி கார்த்திக்.

த்ரில்லர் படங்களின் ரசிகர்களுக்கு விரைவில் ஒரு அறுசுவை விருந்து காத்திருக்கிறது என்று நம்பலாம்.

‘மோகன்தாஸ்’ படக்குழுவினர் விவரம்

கதை, திரைக்கதை இயக்கம்: முரளி கார்த்திக்

தயாரிப்பு நிறுவனம்: வி.வி ஸ்டுடியோஸ்

தயாரிப்பாளர்: விஷ்ணு விஷால்

ஒளிப்பதிவாளர்: விக்னேஷ் ராஜகோபாலன்

இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்

எடிட்டர்: கிருபாகரன்

வசனங்கள்: அரவிந்த் முரளி, முரளி கார்த்திக்

சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு: அன்பறிவ்

ஆடை வடிவமைப்பாளர்: பூர்த்தி ப்ரவீன்

கலை இயக்குநர்: அருண்சங்கர் துரை

கிரியேடிவ் தயாரிப்பாளர்: அனிதா மகேந்திரன்

நிர்வாக மேலாளர்: ஏ.ஆர். சந்திரமோகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள்: சீதாராமன், ஷர்வாந்தி சாய்நாத், தினேஷ் கண்ணன்

இணை தயாரிப்பாளர்: ருத்ரா

போஸ்டர்கள் வடிவமைப்பு: தண்டோரா

ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா

மேலாளர் :  தங்கதுரை

பி.ஆர்.ஓ: யுவராஜ்

விளம்பரம் & மார்க்கெட்டிங்: சித்தார்த் ஸ்ரீனிவாஸ், அஞ்சல் குடாவலா

ஆன்லைன் விளம்பரங்கள்: டிவ்வோ