என் ஒவ்வொரு திரைப்படத்திலும் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தி வரும் ரசிகர்களுக்கு நன்றி : நடிகை அமலா பால்

0
302

என் ஒவ்வொரு திரைப்படத்திலும் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தி வரும் ரசிகர்களுக்கு நன்றி : நடிகை அமலா பால்

அமலா பால் சமீபமாக ஒவ்வொரு படைப்புகளிலும் துணிவுமிக்க அழுத்தமான கதாப்பத்திரங்களில் நடித்து, இந்தியளவில் பாராட்டப்படும் பிரபலமாக மாறி வருகிறார். சமீபத்தில் வெளியான Netflix உடைய “பிட்ட கதலு” திரைப்படத்தில் அவரது அற்புத நடிப்பு, ரசிக்ரகளிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டு பெற்றுள்ளது. Netflix நிறுவனம் நடத்தும் “What’s Next India 2021” எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கும் பெருமையை பெற்றுள்ளார் நடிகை அமலா பால். இந்த நிகழ்வில் இந்திய அளவில் பெரும் பிரபலங்களான பிரியங்கா சோப்ரா, கரண் ஜோகர், விக்ரமாதித்யா மோத்வானி, விவேக் கோம்பர் ஆகியோர் கலந்து கொள்வது குறிப்பிடதக்கது.

இது குறித்து நடிகை அமலா பால் கூறியதாவது..

இந்திய திரை உலகின் மிகப்பெரும் ஆளுமைகளுடன் இந்நிகழ்வில் கலந்து கொள்விருப்பது மிகப்பெரும் உற்சாகத்தையும் மகிழ்வையும் தந்துள்ளது. தென்னிந்திய திரையுலகின் அடையாளமாக, Netflix டிஜிட்டல் திரையின் அனுபவங்களை நான் பகிர்ந்துகொள்ளவுள்ளது மிகப்பெரும் கௌரவம். இந்நேரத்தில் மிக முக்கிய படைப்பாக அனைவராலும் பாராட்டப்படும் Netflix நிறுவனத்தின் “பிட்ட கதலு” படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் ஒவ்வொரு திரைப்படத்திலும் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தி வரும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ALSO READ:

Actress Amala Paul the earliest entrants into the world of Netflix from South Indian domain