‘என் எதிரே ரெண்டு பாப்பா’ – நகைச்சுவையும் பொழுதுபோக்கும் நிறைந்த புதிய தமிழ் வெப்-சீரிஸை வெளியிட்டது, ஹங்காமா!

0
184

என் எதிரே ரெண்டு பாப்பா‘ – நகைச்சுவையும் பொழுதுபோக்கும் நிறைந்த புதிய தமிழ் வெப்சீரிஸை வெளியிட்டதுஹங்காமா!

  • பிரபல நடிகர்களான சாக்‌ஷி அகர்வால்ஷாரிக் ஹாசன்மனிஷா ஜஷ்னானி ஆகியோர் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்!

 சென்னை, இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பொழுதுபோக்கு ஓ.டி.டி. தளமான ஹங்காமா (Hungama) புதிய அடல்ட்-காமெடி தொடரான ‘என் எதிரே ரெண்டு பாப்பா‘வை வெளியிட்டது. சாக்‌ஷி அகர்வால்ஷாரிக் ஹாசன்மனிஷா ஜஷ்னானி உள்ளிட்ட திறமையான, தனித்துவக் கலைஞர்களால் இந்தத் தொடர் கவனம் ஈர்க்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். காதல் உறவு, அன்பு, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அடங்கியுள்ள சிக்கல்கள் குறித்த இந்தத் தொடர், அதிக அளவு நகைச்சுவையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதியத் தொடர் ஆகஸ்ட் 23, 2023 அன்று ஹங்காமாவில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டது.

‘என் எதிரே ரெண்டு பாப்பா’ தனித்துவமான ஒரு பங்களாவில் தங்கியிருக்கும் ஒரு இளம் ஜோடியின் கதை. அங்கு நடக்கும் விஷயங்கள் அவர்கள் எதிர்பார்த்ததுபோல் இல்லாமல், மாறுபட்ட விதத்தில் அமைகின்றன. வருங்கால மனைவியை சட்டென்று கைவிடும் நாயகன், அவரது சூழ்ச்சி, கடத்தல்காரர்களின் கூட்டம், இவர்களிடையே ஏற்படும்  தவறான புரிதல்கள் எனப் பல்வேறு குறுக்கீடுகள், தடைகள்… இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கவர்ச்சிகரமான பேய் நாயகன் ஜித் மீது காதலில் விழுகிறது.

‘என் எதிரே ரெண்டு பாப்பா’ பார்வையாளர்களை கவரும் ஈடு இணையற்ற காட்சி அனுபவத்தை வழங்குகிறது. சூழ்ச்சியின் அடுக்குகள் அவிழும் நேரத்தில் காதல், விசுவாசம் மற்றும் நகைச்சுவை ஆகியவை எதிர்பாராத வழிகளில் மோதிக்கொள்ளும் பரபரப்பான ஒரு பயணத்துக்குத் தயாராகுங்கள்.

இந்தப் புதியத் தொடரைப் பற்றி ஹங்காமா டிஜிட்டல் மீடியாவின் தலைமைச் செயல் அதிகாரி சித்தார்த்த ராய் கூறுகையில், “எங்கள் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘மாயத் தோட்டா’வுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்போது எங்கள் இரண்டாவது ஒரிஜினல் தொடரான ‘என் எதிரே ரெண்டு பாப்பா’வை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். இதன் மூலம் தென்னிந்திய சந்தையில் எங்கள் பார்வையாளர்களைக் கவர்வதில் அடுத்த படிக்கு முன்னேறி உள்ளோம். சஸ்பென்ஸ், சூழ்ச்சி, நகைச்சுவையின் கூறுகள் பின்னிப் பிணைந்திருப்பதற்கு இந்தத் தொடர் ஒரு சான்றாக இருக்கும். அழுத்தமான கதைசொல்லல் மற்றும் கதாபாத்திரங்கள் மூலம், எங்கள் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஹங்காமா அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. அதற்கு சான்றாக இந்தத் தொடரும் அமையும்” என்றார்.

இது குறித்து சாக்‌ஷி அகர்வால் கூறுகையில், “’என் எதிரே ரெண்டு பாப்பா தொடரில் சோனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது நம்பமுடியாதஅதே சமயம் நிறைவான ஒரு அனுபவத்தை எனக்கு தந்தது. காதல், விசுவாசம்அதனுடன் இணைந்துவரும் எண்ணற்ற நுணுக்கமான உணர்ச்சி போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு இளம் பெண் அவள். பார்வையாளர்களுக்கு நவீன கால காதல் உறவுகளைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை வழங்கும் மாறுபட்ட தொடர் இதுஹங்காமா போன்ற ஒரு தளத்தின் மூலம் வழக்கமான விஷயங்களுக்கு சவால் விடுக்கக்கூடியதனித்துவமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் தொடரின் ஒரு பகுதியாக இருப்பது உற்சாகமாக இருக்கிறது. காதல்வாழ்க்கை குறித்த புத்துணர்ச்சியூட்டும் இந்தத் தொடருக்கு பார்வையாளர்கள் எவ்வாறு எதிர்வினை புரிவார்கள் என்பதை அறிவதற்கு காத்திருக்கிறேன்” என்றார்.

 இது குறித்து ஷாரிக் ஹாசன் கூறுகையில், “இந்தத் தொடரில் எனது கதாபாத்திரம் குறிப்பிடத்தக்க வகையில் ஆழமாக அமைந்துள்ளது. முதல் அத்தியாயத்தில் இருந்தே ரோலர்-கோஸ்டர் பயணத்தை தொடங்குகிறது. இன்றைய உலகில், ஒருவரின் தோற்றம், அதுவும் குறிப்பாக ஆண்களுக்கு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. காதலி மீதான தனது அன்பை நிரூபிக்கும் சவாலுடன் என் கதாபாத்திரம் போராடுகிறது. ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய, அதே நேரம் சிந்திக்கத் தூண்டும் வகையில், இந்திரஜித்தின் முதல் பாலுறவு அனுபவம் நேர்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கதைகளுக்கு உயிர் கொடுப்பதில் ஹங்காமா நிறுவனம் ஒரு சிறந்த செயலைச் செய்திருக்கிறது. துணிச்சலான அதேவேளை ஈர்ப்புமிகுந்த இந்தத் தொடரை அனுபவித்துப் பார்க்கும்படி ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இது குறித்து மனிஷா ஜஷ்னானி கூறுகையில், “என் எதிரே ரெண்டு பாப்பாவில் இடம்பெறும் அமானுஷ்ய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது ஒரு அற்புதமான அனுபவமாக அமைந்தது. ஒரு மனிதனுடன் பேயாக காதல் புரிவது, அந்தத் தொடர்பின் மூலம் பல சிக்கல்களை கடப்பது சவாலானதாக இருந்தது. காதலுக்காக ஒருவர் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஹங்காமா ஒரு சிறப்பான கதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தத் தனித்துவமான கதைக்கு பார்வையாளர்களின் எதிர்வினை, வரவேற்பை அறிய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.