உலக சினிமாவை காட்சிப்படுத்தும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமான விழாவுடன் தொடங்குகிறது

0
161

உலக சினிமாவை காட்சிப்படுத்தும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமான விழாவுடன் தொடங்குகிறது

புதுதில்லி, 20 நவம்பர் 2023

கோவாவில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மற்றும் தொடக்க விழாவை  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தொடங்கி வைக்கிறார்.

ஐநாக்ஸ் காம்ப்ளக்ஸில் திரைப்பட விழாவின் முதலாவதாக திரையிடப்படும் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை அமைச்சர் கௌரவிக்கவுள்ளார். ஐ.எஃப்.எஃப்.ஐ 54 இன் போது ஃபிலிம் பஜாரையும் அமைச்சர் திறந்து வைக்கிறார்.

ஃபிலிம் பஜார் என்பது தெற்காசியாவின் மிகப்பெரிய உலகளாவிய திரைப்பட சந்தையாகும், இது ஒவ்வொரு ஆண்டும் ஐ.எஃப்.எஃப்.ஐ உடன் இணைந்து தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது, இது திரைப்படத் தயாரிப்பு, தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் தெற்காசிய உள்ளடக்கத்தை காட்சிப்படுத்துதல் மற்றும் திறமைகளை ஆதரிக்கிறது. தெற்காசிய பிராந்தியத்தில் உலக சினிமாவை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது.

தொடக்க விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான மாதுரி தீக்சித் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம்பெறும். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான ஸ்ரேயா சரண், நுஷ்ரத் பரூச்சா, பங்கஜ் திரிபாதி, சாந்தனு மொய்த்ரா, ஸ்ரேயா கோஷல் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோரும் நடனமாட உள்ளனர்.

இந்த விழாவில் கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ், சல்மான் கான், வித்யா பாலன், ஆயுஷ்மான் குரானா, அனுபம் கெர், விக்கி கவுஷல், சித்தார்த் மல்ஹோத்ரா, அதிதி ராவ் ஹைதாரி, ஏ.ஆர்.ரஹ்மான், அமித் திரிவேதி மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில், உலக சினிமாவின் பல்வேறு அம்சங்களை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது, விருது பெற்ற பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர் ஸ்டூவர்ட் காட் எழுதிய கேட்ச்சிங் டஸ்ட் படத்தின் சர்வதேச பிரீமியர் காட்சியுடன் நிகழ்வு தொடங்குகிறது.

முன்னதாக, திரைப்பட விழாவுக்கு  தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அனுராக் தாக்கூர், தொழில்நுட்பம், உள்ளடக்கத்தை நாம் பயன்படுத்தும் முறையை தொடர்ந்து மாற்றியமைக்கும் ஒரு காலத்தில், திரைப்பட விழாக்கள் சினிமா அனுபவத்தின் நீடித்த ஈர்ப்புக்கு ஒரு சான்றாக உள்ளன என்று கூறியிருந்தார்.

“ஒத்துழைப்புகள், கூட்டு தயாரிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான ஒரு சரியான தளமாக ஐ.எஃப்.எஃப்.ஐ மாறியுள்ளது, மேலும் எங்கள் திரைப்பட தயாரிப்பாளர்களின் ஆர்வம் மற்றும் இயக்குநர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுடனான ஒத்துழைப்பு காரணமாக ஐ.எஃப்.எஃப்.ஐ ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வருகிறது” என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு, ஐ.எஃப்.எஃப்.ஐ அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.  105 நாடுகளிலிருந்து மொத்தம் 2926 உள்ளீடுகள் பெறப்பட்டன, இது கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமான சர்வதேச சமர்ப்பிப்புகள் ஆகும். 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 4 இடங்களில் 270-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவில் 13 உலக பிரீமியர்கள், 18 சர்வதேச பிரீமியர்கள், 62 ஆசியா பிரீமியர்கள் மற்றும் 89 இந்திய பிரீமியர்கள் திரையிடப்பட உள்ளன. சிறந்த வெப் சீரிஸ் (ஓடிடி) விருதுக்காக 15 ஓடிடி தளங்களில் இருந்து 10 மொழிகளில் மொத்தம் 32 பதிவுகள் வந்துள்ளன. 15 திரைப்படங்கள் (12 சர்வதேச திரைப்படங்கள் மற்றும் 3 இந்திய திரைப்படங்கள்) இந்த ஆண்டு மதிப்புமிக்க தங்க மயில் விருதுக்கு போட்டியிடுகின்றன.

ஆவணப்பட தயாரிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், இந்த ஆண்டு டாகு-மான்டேஜ் பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, யுனெஸ்கோவின் கொள்கைகளை பிரதிபலிக்கும் ஏழு சர்வதேச திரைப்படங்கள் மற்றும் மூன்று இந்திய திரைப்படங்களும் இந்த விழாவில் ஐ.சி.எஃப்.டி யுனெஸ்கோ காந்தி பதக்கம் விருது அமர்வில் இடம்பெறும்.

தொடக்க விழா தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தொடக்க மற்றும் நிறைவு விழாக்களில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான பிரத்யேக ஊடக மற்றும் ஒளிபரப்பு பங்கெடுப்பில் வயாகாம் மீடியா பிரைவேட் லிமிடெட் ஈடுபட்டுள்ளது. மேலும் விழா நிகழ்வுகள் கலர்ஸ் டிவி சேனல் மற்றும் அதன் ஓடிடி தளமான ஜியோசினிமாவிலும் ஒளிபரப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;