உதயநிதி ஸ்டாலின் – மாரி செல்வராஜ் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் நாளை (04.03.2022) காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் அவர்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
This is going to be massive!
Stay tuned for a BIG ANNOUNCEMENT tomorrow at 10 AM! 🙌⚡️@Udhaystalin @teamaimpr pic.twitter.com/dLfKYfy3lH
— Red Giant Movies (@RedGiantMovies_) March 3, 2022