உதயநிதி நடிக்கும் ‘ஆர்டிகிள்-15’ தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கியது!

0
228

உதயநிதி நடிக்கும் ‘ஆர்டிகிள்-15’ தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கியது!

2019-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிகிள்-15’ படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தமிழில் ரீமேக் செய்கிறார் போனிகபூர்.

உதயநிதி ஹீரோவாக நடிக்கவுள்ள இந்தப் படத்திற்கான முதற்கட்ட வேலைகள் கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்தன. ஆனால், உதயநிதி தேர்தல் பிரசார வேலைகளில் இருந்ததால் படப்பிடிப்பை தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்துவிட்டதால், தமிழில் உருவாகும் ‘ஆர்டிகிள் 15’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கிவிட்டனர். அதில், உதயநிதி இல்லாத காட்சிகளை முதலில் படமாக்குகின்றனர். உதயநிதி அடுத்த வாரம் படக்குழுவினருடன் இணைவுள்ளதாக படக்குழு வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.