’இவருக்கு கண்கள் ஆயிரம்’: கலகலபூட்டும் சந்தானத்தின் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ டீசர்

0
84

’இவருக்கு கண்கள் ஆயிரம்’: கலகலபூட்டும் சந்தானத்தின் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ டீசர்

நடிகர் சந்தானத்தின் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஸ்வரூப் இயக்கத்தில் கடந்த 2019-ல் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா’ படத்தினை ‘ஏஜெண்ட் கண்ணாயிம்’ படமாக ரீமேக் செய்து நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். இப்படத்தினை ‘வஞ்சகர் உலகம்’ மூலம் கவனம் ஈர்த்த மனோஜ் பீதா இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது டீசரை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

துப்பறியும் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் கண்ணாயிரம் என்ற டிடெக்டிவாக வருகிறார் சந்தானம். ”தொலைச்சதைத் தேடி அலையவேணாம், எந்தக் கேஸா இருந்தாலும் இழுத்துபோட்டுத் தாங்கிக்குவாரு. எவ்ளோ காசுக் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிக்குவாரு. அவர்தான் எங்கண்ணன் கண்ணாயிரம்.. கண்ணாயிரம்.. கண்ணாயிரம். இவருக்கு கண்கள் ஆயிரம்” என்று எக்கோவுடன் பின்னணி குரல் ஒலிக்க சந்தானமோ தடுக்கி விழுந்து நம்மை கலகலப்பூட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறார்.

நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்கேற்றவாறு யுவனின் பின்னணி இசையும் பலம் சேர்க்கின்றன.