‘இறை அருளுக்கு நன்றி’ – இளையராஜாவுடன் கங்கை அமரன் சந்திப்பு

0
87

‘இறை அருளுக்கு நன்றி’ – இளையராஜாவுடன் கங்கை அமரன் சந்திப்பு

சில வருடங்களாக இளையராஜாவும் அவரின் சகோதரர் கங்கை அமரன் பேசிக் கொள்வதில்லை என்ற செய்திகள் வெளியாகின. தற்போது இளையராஜாவும், கங்கை அமரனும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கங்கை அமரனின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த ‘கரகாட்டக்காரன்’ உள்பட பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.