இறுதிப்பக்கம் விமர்சனம்: இறுதிப்பக்கம் முதல் வரிசையில் இடம் பிடித்து அசத்தும்

0
167

இறுதிப்பக்கம் விமர்சனம்: இறுதிப்பக்கம் முதல் வரிசையில் இடம் பிடித்து அசத்தும்

ஆன் இன்சோமேனியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் சிலம்பரசன், கிருபாகர், செல்வி வெங்கடாசலம் இணைந்து தயாரித்திருக்கும் படம் இறுதிப்பக்கம்.

தில் ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன், விக்னேஷ் சண்முகம், கிரிஜா ஹரி, ஸ்ரீராஜ், சுபதி ராஜ் ஆகியோர் நடிக்க எழுதி இயக்கியிருக்கிறார் மனோ.வெ.கண்ணதாசன்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-பிரவின்பாலு, இசை-ஜோன்ஸ் ரூபர்ட், படத்தொகுப்பு-ராம் பாண்டியன், ஒலி வடிவமைப்பு-ராஜேஷ் சசீPந்திரன், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்-சுமேஷ், கலை-ஜெய் ஜெ திலீப், ஒப்பனை-திவ்யா, நிர்வாக தயாரிப்பு-மனோ வெ.கண்ணதாசன், மக்கள் தொடர்பு-சக்தி சரவணன்.

சேவியர் ஆசிரமத்தில் வளரும் கராஜேஷ் பாலச்சந்திரனிருபா (அம்ருதா ஸ்ரீநிவாசன்) நன்றாக எழுதக்கூடிய புலமை பெற்றவர். எந்த ஒரு புத்தகத்தை எழுதும் போதும் கற்பனையில் எழுதக்கூடாது அதை நேரிடையாக அனுபவித்து எழுதினால் தான் இயல்வாக இருக்கும் என்ற கொள்கை கொண்ட எழுத்தாளர். சென்னைக்கு வந்தவுடன் புனைப்பெயர் இயல் என்று மாற்றி பல புத்தகங்களை எழுதுகிறார். கல்லூரி நாட்களில் அவரின் புத்தகங்களை படிக்கும் பிராசந்த்(விக்னேஷ் சண்முகம்) தீவிர ரசிகராகி இயலை காதலிக்க தொடங்குகிறார். ஆனால் இயல் காதலை மறுத்து ஒதுங்கி செல்கிறார். சில வருடங்கள் கழித்து பிரசாந்த் இயலை சந்திக்க நேரிட மீண்டும் காதல் துளிர் விடுகிறது. பிரசாந்த் இயலில் எழுத்து மீது காதல் இருந்தாலும், அவர் புதிதாக எழுதும் புத்தகம் செக்ஸ் வித் ஸ்ட்ரேஞ்சர்ஸ்  அதில் பல ஆண்கள், பெண்கள் என்று உறவு வைத்து அதை நாவலாக எழுதுவதை அறிந்து அதிர்ச்சியாகிறார். இயலிடமிருந்து சண்டை போட்டு விட்டு பிரிந்து செல்கிறார். அதன் பின் இயல் மர்மமான முறையில் அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறார்.இந்த கொலையை விசாரிக்க போலீஸ் அதிகாரி குமார் (ராஜேஷ் பாலச்சந்திரன்) களமிறங்குகிறார். அதன் பின் தான் இயலின் திடுக்கிடும் குணாதியங்களை போலீஸ் அதிகாரி குமார் கண்டுபிடிக்கிறார். இயலிடம் தொடர்பில் இருந்த மிதுன்(ஸ்ரீராஜ்) மற்றும் பிரசாந்த் மூலம் கொலையாளியை நெருங்கி பிடித்தாலும், அவரை கொலை செய்ய அனுப்பியவர் யார்? என்ற உண்மையை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இறுதியில் மர்ம முடிச்சை கண்டுபிடித்தார்களா? இறுதிப் பக்கத்தின் உண்;மையான நாயகன் யார்? என்பதே திருப்பங்கள் நிறைந்த கதைக்களம்.

அம்ருதா ஸ்ரீநிவாசன் துணிச்சலான எழுத்தாளர் இயல் கதாபாத்திரத்தில் அழகிலும்,அதிர்ச்சி தரும் குணாதியங்கள் நிறைந்த நடிப்பிலும் அசத்தியுள்ளார்.

போலீஸ் அதிகாரி குமாராக ராஜேஷ் பாலச்சந்திரன் அசால்டான, கண்டிப்பான ஆனால் பொறுமையான போலீஸ் அதிகாரியாக நூறு பர்சண்ட் சரியான தேர்வு.

மற்றும் விக்னேஷ் சண்முகம், கிரிஜா ஹரி, ஸ்ரீராஜ், சுபதி ராஜ் மற்றும் பலர் படத்திற்கு முக்கிய பங்களித்து கதையை நகர்த்த உதவியுள்ளனர்.
ஒளிப்பதிவு-பிரவின்பாலு, இசை-ஜோன்ஸ் ரூபர்ட் ஆகிய இருவரும் தனித்துவமான திரைக்கதைக்கேற்ற பங்களிப்பை கொடுத்து கவனம் ஈர்க்கின்றனர்.

ராம் பாண்டியனின் படத்தொகுப்பு படத்தின் தன்மை திசை திரும்பாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

டைட்டிலுக்கு கேற்ற கதை இறுதிப்பக்கம். இந்த புத்தகத்தின் இறுதிப்பக்கத்தில் தான் படத்தின் முக்கிய குறிப்பு போலீசுக்கு கொலையின் காரணத்தை புரிய வைக்கிறது. அதிலும் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லராக, ஒரு பெண்ணியம் கலந்த எழுத்தாளரின் எண்ணத்தையும், செயல்களையும் துணிச்சலாக காட்டி அதை அவருடைய பார்வையில் நியாயப்படுத்தி எதற்கும் சமரசம் செய்யாமல் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழும் சுதந்திரப்பெண்ணை காட்டியிருப்பதிலும் வித்தியாசமான திரைக்கதையிலும், ஒவ்வொரு காட்சியையும் வெவ்வேறு கோணங்களில் எடுத்துச் சென்று கேள்விக்குறியான லாஸ்ட் பேஜ் புத்தகம் (இறுதிப்பக்கம்) யாரிடம் செல்கிறது என்பதை ஒரு மையப்புள்ளியில இணைத்து நேர்த்தியாக கொடுத்து அசத்தியும் உள்ளார் இயக்குனர் மனோ.வெ.கண்ணதாசன். யாருமே ஏற்றுக்கொள்ளமுடியாத கதையின் நாயகியை அனைவரும் ரசிக்கும் வண்ணமும் முகம் சுலிக்காத வண்ணம் காட்சிகளை சிறப்பாக அமைத்து மர்ம முடிச்சுகளோடு ஆச்சர்யமாக கொடுத்திருப்பதிலேயே வெற்றியும் பல பாராட்டுக்களையும் பெறுவார் இயக்குனர் மனோ.வெ.கண்ணதாசன். வெல்டன்.

மொத்தத்தில் ஆன் இன்சோமேனியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் சிலம்பரசன், கிருபாகர், செல்வி வெங்கடாசலம் இணைந்து தயாரித்திருக்கும் படம் இறுதிப்பக்கம் முதல் வரிசையில் இடம் பிடித்து அசத்தும்.