இராமநாராயணன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

0
139

இராமநாராயணன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கதின் முன்னாள் தலைவர் திரு. இராம நாராயணன் அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது, அதில் திரு. இராம நாராயணன் அவர்களின் மகனும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கதின் தலைவருமான திரு. இராமசாமி (எ ) தேனாண்டாள்முரளி அவர்கள் தனது தந்தை திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கௌரவ செயலாளர்கள் திரு. ஆர். இராதாகிருஷ்ணன், திரு.தி.மன்னன். பொருளாளர் திரு. சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் முன்னாள் தலைவர்கள் திரு. K.முரளிதரன், திரு. கலைப்புலி எஸ் தாணு. முன்னாள் செயலாளர்கள் திரு. சிவசக்தி பாண்டியன், திரு. சிவஸ்ரீ ஸ்ரீனிவாசன், செயற்குழு உறுப்பினர்கள் திரு.ஆர்.வி.உதயகுமார், திரு. விஜயமுரளி. திரு. அன்பாலயா பிரபாகரன். திரு. பழனிவேல், திருமதி. ராஜேஸ்வரி வேந்தன், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.கருணாநிதி அவர்கள் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக திரு. காட்ரகட்ட பிரசாத், திரு. ரவி கொட்டாரக்கரா, திரு.கிருஷ்ணா ரெட்டி, ஷாகுல்அமீது, கில்டு தலைவர் திரு. ஜாகுவார் தங்கம், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு. நாசர், துணைத்தலைவரும் , தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய தலைவருமான திரு. பூச்சி முருகன், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. கே.ராஜன், செயலாளர் திரு. காளயப்பன், இணைச்செயலாளர் திரு. சாய்பாபா. தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு.அருள்பதி , தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பொது செயலாளர் திரு, டி.சிவா டிஜிட்டல் பிலிம் அசோசியேசன் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், பைனான்சியர் மதுரை அழகர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு. ஆர்.கே செல்வமணி, செயலாளர் திரு.சபரிகிரீசன் பொருளாளர் திரு. பி. என். சாமிநாதன் பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் டைமண்ட் பாபு
மற்றும் திரளான தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், திரை உலகினர் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர் .