இரண்டே நாளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ வசூல் எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?

0
144

இரண்டே நாளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ வசூல் எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த சனிக்கிழமை அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.

இந்த டாக்டர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தமிழில் வெளியான அதே நாளில் வருண் டாக்டர் (Varun Doctor) என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம். குழந்தைகள் கடத்தல் பற்றிய இந்த படத்தின் பிளாக் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால், வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடையும் என திரைத்துறையினர் கூறுகின்றனர். கொரோனா சூழலிலும் குடும்பங்களை தியேட்டருக்கு கொண்டுவந்துள்ளது ‘டாக்டர்’ என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு,தீபா உள்ளிட்ட பலரும் காமெடியான நடிப்பில் கவனம் ஈர்த்துள்ளனர். இந்த நிலையில், ‘டாக்டர்’ வெளியான இரண்டே நாட்களில் தமிழகத்தில் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதும் என்றும் வெளிநாடுகளில் 6 கோடி ரூபாயும், கர்நாடகா, ஆந்திராவில் 1 கோடிக்கு ரூபாய்க்கு மேலும் வட இந்தியாவில் 22 லட்ச ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தமாக சேர்த்து 27 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

50% பார்வையாளர்களுக்கு மட்டுமே தற்போது திரையரங்கினுள் அனுமதி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.