இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகை அனுஷ்கா
கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா படப்பிடிப்பில் அடியெடுத்து வைக்கிறார். அனுஷ்கா, நவீன் போலிசெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. யுவி கிரியேஷன்ஸில் அனுஷ்கா நடிக்கும் மூன்றாவது படம் இது. இந்த படத்தில் அவர் தனது சமீபத்திய தோற்றத்தில் காணப்படுவார். தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். புதுமையான கதைக்களத்தில் உருவாகவிருக்கும் இப்படம் தெலுங்கு ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும்’ என படக்குழு தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள்: வம்சி, பிரமோத், இயக்குனர்: பி. மகேஷ்பாபு.