இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர்.C நாயகனாக நடிக்கும் புதிய படம்
கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார். VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் C கதாநாயகனாக நடிக்கின்றார். ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம்,
கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.
கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.
படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
கலை – M. லக்ஷ்மி தேவா
புரொடக்ஷன் எக்ஸிகுயுடிவ் – D.சரவண குமார் (ராஜு)
பாடல்கள் – உமா தேவி, கோசேஷா, பாலா
டிசைனர் – நவீன்
நடனம் – கல்யாண், சந்தோஷ்
சண்டைப்பயிற்சி – விக்கி நந்தகோபால்
காஸ்டுயும் டிசைனர் – நிகிதா நிரஞ்சன்
ஸ்டில்ஸ் – ராஜேந்திரன்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது.