இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் படபூஜைக்கு வந்த, குட்டி விஐபி!

0
255

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் படபூஜைக்கு வந்த, குட்டி விஐபி!

நீண்ட வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜையில், சுவாரஸ்ய சம்பவமாக, தான் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஊட்டியிலிருந்து காரில் வந்திறங்கியிருக்கிறார் குட்டி விஐபி, நடிகர் அருண்விஜய் மகன் ஆர்ணவ்.

ஒரே குடும்பத்திலிருந்து, பல வருடங்கள் தமிழ் திரையுலகில் தனித்தனியே கோலோச்சிகொடிருந்தாலும் இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணி உருவாவது, பல காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த இக்கூட்டணி தற்போது இணைந்துள்ளது.
டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.சக்திவேல் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக இப்படத்தினை தயாரிக்கிறார். அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை ப்ரியா பவானி சங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழின் முன்னணி ஆளுமைகள் பங்குபெறும் இத்திரைப்படத்தின் பூஜை கடந்த மார்ச் 3ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜையில் விஐபி போல் கலந்து கொண்டிருக்கிறார் நடிகர் அருண்விஜய் மகன் ஆர்ணவ்.

நடிகர் சூர்யா 2D Entertainment நிறுவனம் சார்பாக குழந்தைகளின் உலகை மையமாக வைத்து தயாரிக்கும், இன்னும் தலைப்பிடப்படாத படத்தில் நடிகர் அருண் விஜய் அவர்களின் மகன் ஆர்ணவ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஓய்வின்றி தொடர்ந்து 51 நாட்கள் கலந்துகொண்ட மாஸ்டர் ஆர்ணவ் அங்கிருந்து காரில் பயணம் செய்து நேரிடையாக தனது தந்தையின் பட பூஜைக்கு விஐபி போல் வந்திறங்கியுள்ளார். விழாவில் நடிகர் அருண் விஜய் அனைவரிடமும் பெருமையாக தனது மகனை அறிமுகப்படுத்தினார். சிறு வயதிலேயே விஐபியான மாஸ்டர் ஆர்ணவை, இயக்குநர் ஹரி பெரும் நட்சத்திரமாக வளர வாழ்த்தி ஆசிர்வதித்தார். படக்குழுனவினரும் மாஸ்டர் ஆர்ணவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.