இயக்குநர் ஞானசாகர் துவாரகாவுடன் இணையும் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு

0
138

ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபுவின் 18 ஆவது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு வித்தியாசமான ஜானரிலான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மைக்காக உடலமைப்பில் மாற்றங்களையும் செய்து நடிக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் அவரின் உடல் மொழி மற்றும் தோற்றப்பொலிவில் மாறுபாட்டை நாம் காணலாம்.

இந்நிலையில் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் 18 வது படம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‌செஹரி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ஞானசாகர் துவாரகாவுடன் அவர் இணைகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சுப்பிரமணியேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இதற்கான அறிவிப்பு, வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டருடன் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தெற்கு மும்பையை சேர்ந்த அருண் கோலி என்பவரிடமிருந்து சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு எழுதிய உள்நாட்டு கடிதமும், அதில் ” அவசரம்: உங்களது வருகை அவசியமானது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்துடன் துப்பாக்கி, தோட்டாக்கள், பழைய ரூபாய் நோட்டு, தொலைபேசி மற்றும் சுருட்டு ஆகியவைகளும் இடம்பெற்றிருக்கிறது. இதனுடன் கிராமத்து சூழலின் பின்னணியில் ஆலயம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ‘அக்டோபர் 31ஆம் தேதி மாஸான சம்பவம்’ என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிப்பில் தயாராகி வரும் அவரது பதினெட்டாவது திரைப்படம், ஒரு தெய்வீக அம்சம் கொண்ட காலகட்டத்தை சார்ந்த அதிரடி நாடகம். மேலும் இதன் கதைக்களம் 1989 ஆம் ஆண்டில் குப்பம் எனும் ஊரில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இது மண் மனம் கமழும் படைப்பு. இதுவரை ரசிகர்கள் கண்டிராத வித்தியாசமான தோற்றத்தில் சுதீர் பாபு நடிக்கிறார். இதற்காக தற்போது அவர் தன்னை முழுவீச்சில் தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.

மேலும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பட நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.