இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவுக்கு தேர்வான படங்கள் அறிவிப்பு: 2 தமிழ் படங்கள் தேர்வு

0
164

இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவுக்கு தேர்வான படங்கள் அறிவிப்பு: 2 தமிழ் படங்கள் தேர்வு

Chennai, கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52-வது பதிப்பில் திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியல் வெளியிடப்படுள்ளது.

தேர்வான 24 திரைப்படங்களில் பி எஸ் வினோத்ராஜ், இயக்கிய ‘கூழாங்கல்’ இடம் பெற்றுள்ளது. மேலும், கதையில்லா திரைப்படங்கள் பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ‘ஸ்வீட் பிரியாணி’யும் அவற்றில் ஒன்றாகும்.

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கோவா மாநில அரசுடன் இணைந்து, 2021 நவம்பர் 20 முதல் 28 வரை இந்த விழாவை இந்திய திரைப்பட விழா இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ளது.

விழாவில் கலந்து கொள்ள பதிவு செய்து கொண்டுள்ள அனைவருக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் பிரதிநிதிகளுக்கும் கோவாவில் 9 நாட்கள் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்படும்.

திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் திரு எஸ் வி ராஜேந்திர சிங் பாபுவும், கதையில்லா  திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு பிரபல ஆவணப் பட இயக்குநர் திரு எஸ் நல்லமுத்துவும் தலைமையேற்றிருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களில் முதல் திரைப்படமாக அசாம் மற்றும் நாகலாந்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பேசும் திமாசா மொழியில் உருவான ‘செம்கோர்’ படம் திரையிடப்படும். கதையில்லா பிரிவில் முதல் திரைப்படமாக ‘வேத்- தி விஷனரி’ எனும் ஆங்கில மொழி படம் திரையிடப்படும்.

List of 24 Feature Films selected in the Indian Panorama 2021 is as follows:

S.No.Title of the FilmLanguageDirector
KALKOKKHOBengaliRajdeep Paul & Sarmistha Maiti
NITANTOI SAHAJ SARALBengaliSatrabit Paul
ABHIJAANBengaliParambrata Chattopadhyay
MANIKBABUR MEGHBengaliAbhinandan Banerjee
SIJOUBodoVishal P Chaliha
SEMKHORDimasaAimee Baruah
21st  TIFFINGujaratiVijaygiri Bava
EIGHT DOWN TOOFAAN MAILHindiAkriti Singh
ALPHA BETA GAMMAHindiShankar Srikumar
DOLLUKannadaSagar Puranik
TALEDANDAKannadaPraveen Krupakar
ACT-1978KannadaManjunatha S. (Mansore)
NEELI HAKKIKannadaGanesh Hegde
NIRAYE THATHAKALULLA MARAMMalayalamJayaraj
SUNNYMalayalamRanjith Sankar
ME VASANTRAOMarathiNipun Avinash Dharmadhikari
BITTERSWEETMarathiAnanth Narayan Mahadevan
GODAVARIMarathiNikhil Mahajan
FUNERALMarathiVivek Rajendra Dubey
NIWAASMarathiMehul Agaja
BOOMBA RIDEMishingBiswajeet Bora
BHAGAVADAJJUKAMSanskritYadu Vijayakrishnan
KOOZHANGALTamilVinothraj P S
NATYAMTeluguRevanth Kumar Korukonda

List of 20 Non-Feature Films selected in the Indian Panorama 2021 is as follows:

S.No.Title of the FilmLanguageDirector
VeeranganaAssameseKishore Kalita
Naad – The SoundBengaliAbhijit A. Paul
Sainbari To SandeshkhaliBengaliSanghamitra Chaudhuri
Badal Sircar & the Alternative TheatreEnglishAshok Viswanathan
Ved…The VisionaryEnglishRajiv Parkash
Surmounting ChallengesEnglishSatish Pande
SunpatGarhwaliRahul Rawat
The Spell of PurpleGujaratiPrachee Bajania
Bharat, Prakriti Ka BalakHindiDr. Deepika Kothari & Ramji Om
Teen AdhyayHindiSubash Sahoo
Bablu Babylon SeHindiAbhijeet Sarthi
The KnockerHindiAnanth Narayan Mahadevan
Ganga-PutraHindiJai Prakash
GajraHindiVineet Sharma
JugalbandiHindiChetan Bhakuni
Pabung SyamManipuriHaobam Paban Kumar
Murmurs of the JungleMarathiSohil Vaidya
BackstageOriyaLipka Singh Darai
WitchSantaliJackie R. Bala
Sweet BiriyaniTamilJeyachandra Hashmi