இது ஒரு கனவு டீம்! க்ளாசிக் காவியமான ஆதிபுருஷ் திரைப்படத்துக்காக ஓம் ராவத் மற்றும் பிரபாஸ் இருவரும் பூஷன் குமாருடன் இணைகின்றனர்

0
541

இது ஒரு கனவு டீம்! க்ளாசிக் காவியமான ஆதிபுருஷ் திரைப்படத்துக்காக ஓம் ராவத் மற்றும் பிரபாஸ் இருவரும் பூஷன் குமாருடன் இணைகின்றனர்

அதிரடி இயக்குநர் ஓம் ரவாத்தும் அதிரிபுதிரி ஆக்ஷன் ஹீரோ பிரபாஸும் பூஷன்குமாருடன் கைகோர்த்துக் களம் இறங்கும் அதிசயம் நிகழப்போகிறது!

‘ஆதிபுருஷ்’ என்ற பிரம்மாண்டமான அற்புத வரலாற்றுத் திரைப்படக் காவியத்துக்காக உருவாகி இருக்கிறது இந்த மெகா கூட்டணி!
டி- சீரிஸின் தலைமை நிர்வாக இயக்குநரான பூஷன் குமார், ‘டன்ஹாஜி – தி அன்சங் வாரியர்’ திரைப்பட இயக்குநர் ஓம் ரவாத், பிரபாஸ் ஆகியோர் ரெட்ரோஃபிலிஸ் நிறுவனந்த்துடன் இணைந்து உருவாக்கும் மாபெரும் வரலாற்றுச் சாஸனம்தான் 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம்! இது இந்திய வரலாற்றுப் பின்னணியைத் தழுவி, அநீதிக்கு எதிரான நியாயத்தின் போராட்டத்தை மையமாகக்கொண்டு பின்னிப் பிணையப்பட்ட உன்னதப் படைப்பு!

கண்ணுக்கு விருந்தான டன்ஹாஜியை இயக்கிய அதிரடி இயக்குநர் ஓம் ரவாத், ரெட்ரோஃபிலிஸ் அமைப்பின் நிறுவனர் ஆவார். இவரது இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ், வானமே எல்லையாகக் கொண்ட வண்ணக் காவியம்; ஏராளமான பொருட் செலவில், உன்னதமான படைப்பாற்றல் மிக்க பின்னணிகளுடனும், இணையற்ற VFX தொழில்நுட்பத்துடனும் மகிழ்விக்கபோகிறது.

ALSO READ:

The Dream Team! Om Raut & Prabhas join hands with Bhushan Kumar for a Classic Epic Drama ‘Adipurush’!

ரவாத்துக்கு உறுதுணையாக இருப்பவர் பூஷண்குமார் (டி சீரிஸ்). ரெட்ரோஃபிலிஸ் நிறுவனத்துடன் இணைந்து, தமது கனவுகளுக்குத் திரை வடிவம் அளிக்கிறார்.

பாகுபலி அளித்த மாபெரும் வெற்றிக்குப் பின்னர், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பாத்திரத்தை ஏற்று பிரபாஸ் சிறப்பிக்கிறார்.

ஓம் ரவாத்தின் இந்த மாபெரும் திரைக் காவியம், இந்தியக் கலாசாரத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு, ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படும். 3D தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் இந்த பிரம்மாண்டப் படைப்பு தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு கோலாகலமாக வெளியிடப்படும். பாலிவுட்டைக் கலக்கும் பெரும் புள்ளிகளில், வில்லனாக இந்தப் படத்தில் யார் நடிக்கப்போகிறார் என்பது குறித்தான பரபரப்பான யூகங்கள் திரையுலக வட்டாரத்தில் அலையடிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்!

ஆதிபுருஷ் படத்தை பற்றி பிரபாஸ் கூறும்போது, ‘ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சவால்கள் நிறைந்தது, ஆனால் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை திரையில் கொண்டுவருவது மிகவும் பொறுப்புமிக்கது மற்றும் பெருமைக்குரியது. இயக்குநர் ஓம் விசேஷமாக வடிவமைத்துள்ள இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். நம் நாட்டின் இளைஞர்கள் தங்கள் அன்பை இப்படத்தின் மீது பொழிவார்கள் என்று உறுதியாக கூறுகிறேன்.’ என்றார்.

பூஷன் குமார் கூறும்போது, ‘இப்படம் என் இதயத்துக்கு நெருக்கமானது. நாங்கள் தயாரிக்கும் எல்லா படங்களும் எங்களோடு உணர்வுரீதியாக இணைந்திருக்கின்றன. ஆனால் ஓம் ஆதிபுருஷ் படத்தின் கதையை என்னிடம் கூறும்போது, ‘இந்த கனவு திட்டத்தில் பணியாற்றும் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்று எனக்கு தோன்றியது. என்னுடைய தந்தை மற்றும் என் குடும்பத்தினரைப் போல நமது வரலாற்றின் மீதும், புராணங்களின் மீதும் எனக்கும் அதீத நம்பிக்கை உள்ளது. சிறு வயது முதலே அவற்றை கேட்டுத்தான் நாங்கள் வளர்ந்தோம். இந்த பிரம்மாண்ட படத்தின் நானும் ஒரு அங்கமாக இருக்கப் போகிறேன் என்று உடனடியாக எனக்கு தோன்றியது. தாங்கள் நம்பும் ஒரு கதையை பெரிய திரையில் அற்புதமான காட்சிகளுடனும், மகத்துவமான கதாபாத்திரங்களுடனும் காண பார்வையாளர்கள் தயாராக வேண்டும்.’ என்றார்.

இது குறித்து ஓம் ராவத் கூறும்போது, ‘இந்த படத்தில் நடிக்கவும் என்னுடைய நோக்கத்தையும் ஒப்புக்கொண்ட பிரபாஸுக்கும், என்னுடைய கனவு திரைப்படத்தை வெளியிட நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கிய பூஷன் அவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மிகப்பெரிய கனவுகளோடும், பெருமிதத்தோடும், இதற்கு முன் பார்த்திராத ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் உறுதியோடும் இந்த பயணத்தை தொடங்குகிறோம்’ என்றார்.

சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் படங்களுக்கு பிறகு பூஷன் குமார் பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் ஆதிபுருஷ். இயக்குநர் ஓம் ராவத்துடன் இணையும் முதல் படம். இந்த மூவர் கூட்டணி வெற்றிக்கான இலக்கணத்தை நிச்சயம் உருவாக்கும்.

பூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். 2021ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022ஆம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.