இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் ; நேரில் சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் படக்குழு
தொடர்ந்து வெள்ளி விழா படங்களை கொடுத்த பெருமைக்குரியவர் மக்கள் நாயகன் ராமராஜன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கி வருகிறார்
ராமராஜன் படங்களின் வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார்.
அந்த வகையில் இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்துள்ளனர்.
இன்று இசைஞானி இளையராஜாவின் 80 ஆவது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்கள் நாயகன் ராமராஜன், இயக்குநர் R.ராகேஷ் உள்ளிட்ட சாமானியன் படக்குழுவினர் இசைஞானியை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றனர்.
இந்த படத்தில் கதாநாயகிகளாக ஸ்மிருதி வெங்கட், அபர்னிதா மற்றும் நக்சா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கே எஸ். ரவிக்குமார், சரவணன் சுப்பையா, ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, கஜராஜ், முல்லை கோதண்டம், விஜய் டிவி தீபா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். எஸ் கே கலை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்
தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப்படத்திற்கான பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.