ஆஸ்கர் விருதுக்கு வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் பரிசீலிக்கப்பட்ட 4 தமிழ் படங்கள் உட்பட மொத்தம் 22 படங்கள்!

0
180

ஆஸ்கர் விருதுக்கு வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் பரிசீலிக்கப்பட்ட 4 தமிழ் படங்கள் உட்பட மொத்தம் 22 படங்கள்!

2023-ம் ஆண்டுக்கான அகாடமி (ஆஸ்கார்) விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் திரு. கிரிஷ் காசரவல்லி தலைமையிலான குழு 2023-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

பட்டியிலிடப்பட்டிருந்த பல்வேறு படங்களில் இருந்து இந்த குழு ‘2018 – ‍‍எவரிஒன் ஈஸ் எ ஹீரோ (2018 – Everyone is a Hero) மலையாள‌ திரைப்படத்தை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரு. கிரிஷ் காசரவல்லி, கேரளாவில் நடைபெற்ற இயற்கை பேரிடரை மையப்படுத்தி மனிதமே முக்கியம் எனும் கருத்தை ‘2018 – ‍‍எவரிஒன் ஈஸ் எ ஹீரோ’ மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும், ஒட்டு மொத்த உலகத்திற்கும் இக்கருத்து பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் ரவி கொட்டரக்கரா கூறியதாவது: “பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை உலகெங்கிலும் நாம் காண்கிறோம். தன்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று பூமித்தாய் மன்றாடுகிறாள். 2015ம் ஆண்டு சென்னை வெள்ளம், 2018ம் ஆண்டு கேரள வெள்ளம், 2023ம் ஆண்டு இமாச்சல், உத்தரகண்ட் பேரழிவு மற்றும் லிபியாவில் ஏற்பட்ட பேரழிவு போன்ற இயற்கை சீற்றங்களில் ஆயிரக்கணக்கான உயிர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி பணம் பறிபோனது. இவற்றில் இருந்து பாடம் கற்று, உலகைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். ‘2018 – எவரிஒன் ஈஸ் எ ஹீரோ’ இதைப் பற்றியும் இன்னும் பல விஷயங்களையும் திறம்பட பேசும் ஒரு சிறந்த படமாகும்.”

ஆஸ்கார் விருது 2023 க்கான தேர்வுக் குழுவின் பட்டியல்:

1. திரு. கிரிஷ் கசரவல்லி (தலைவர்) – பெங்களூர் – இயக்குனர்

2. திரு. ஜோஷி ஜோசப் – கொல்கத்தா – இயக்குனர்

3. செல்வி. சதரூபா சன்யால் – கொல்கத்தா – தயாரிப்பாளர் , இயக்குனர் , நடிகை

4. திரு. எம். வி . ரகு – ஹைதெராபாத் – இயக்குனர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர்

5. செல்வி. மஞ்சு போரா – குவஹாத்தி – இயக்குனர், எழுத்தாளர்

6. திரு. சந்தீப் சேனன் – கொச்சி – தயாரிப்பாளர்

7. திரு. முகேஷ் மெஹ்தா – சென்னை – தயாரிப்பாளர்

8. திரு. ஆர். மாதேஷ் – சென்னை – இயக்குனர், எழுத்தாளர்

9. திரு. எஸ் . விஜயன் – சென்னை – ஸ்டண்ட் மாஸ்டர்

10. திரு. ஸ்ரீகர் பிரசாத் – சென்னை – எடிட்டர்

11. செல்வி. வாசுகி பாஸ்கர் – சென்னை – கோஷ்டியும் டிசைனர்

12. செல்வி. தினேஸ் கால்வாசிவால – மும்பை – தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர்

13. திரு. ராகுல் போலே – வதோதரா – இயக்குனர், எழுத்தாளர், எடிட்டர்

14. திரு. ஷகாஜீட் டே – டெல்லி – தயாரிப்பாளர், எழுத்தாளர்

15. திரு. அசோக் ரானே – மும்பை – இயக்குனர், எழுத்தாளர், எடிட்டர்

16. திரு. என் . ஆர் . நஞ்சுண்டே கவுடா – பெங்களூர் – இயக்குனர்

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைப்பதற்காக பரிசீலக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் – 2023

1 பாலகம் – தெலுங்கு
2 தி கேரளா ஸ்டோரி – ஹிந்தி
3 12th பெயில் – ஹிந்தி
4 ஸ்விகடோ – ஹிந்தி
5 ராக்கி ஆர் ராணி கிய் பிரேம் கஹானி – ஹிந்தி
6 தி ஸ்டோரிடெல்லேர் – ஹிந்தி
7 மியூசிக் ஸ்கூல் – ஹிந்தி
8 Mrs. சட்டர்ஜீ vs நோர்வே – ஹிந்தி
9 விடுதலை பார்ட் 1 – தமிழ்
10 குஹும்மர் – ஹிந்தி
11 தசரா – தெலுங்கு
12 காதர் 2 – ஹிந்தி
13 வால்வி – மராத்தி
14 மாமன்னன் – தமிழ்
15 பாப்லயோக் – மராத்தி
16 தி வாக்சின் வார் – ஹிந்தி
17 சார் – தெலுங்கு
18 வாத்தி – தமிழ்
19 அபி டொஹ் சப் பகவான் பரோஸ் – ஹிந்தி
20 விருபாக்ஷா – தெலுங்கு
21 2018 ‍ எவரிஒன் ஈஸ் எ ஹீரோ – மலையாளம்
22 ஆகஸ்ட் 16, 1947 – தமிழ்

தமிழ் படங்கள் (4)

விடுதலை பாகம் 1
வாத்தி
மாமன்னன்
ஆகஸ்ட் 16,1947

தெலுங்கு படங்கள் (4)

பாலகம்
தசரா
சார்
விருபாக்ஷா

ஹிந்தி படங்கள் (11)

தி கேரளா ஸ்டோரி
12 th பெயில்
ஸ்விகடோ
ராக்கி ஆர் ராணி கிய் பிரேம் கஹானி
தி ஸ்டோரி டெல்லர்
மியூசிக் ஸ்கூல்
Mrs . சட்டர்ஜி vs நார்வே
குஹூம்மர்
காதர் 2
தி வாக்சின் வார்
அபி டொஹ் சப் பகவான் பரோஸ்

மலையாள படங்கள் (1)

2018 எவரிஒன் ஈஸ் எ ஹீரோ

மராத்தி படங்கள் (2)

வால்வி
பாப்லயோக்