’ஆஸ்கர்’ விருதுக்கு சிறந்த இந்திய படமாக நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ‘கூழாங்கல்’ தேர்வு

0
117

’ஆஸ்கர்’ விருதுக்கு சிறந்த இந்திய படமாக நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ‘கூழாங்கல்’ தேர்வு

விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவான ‘கூழாங்கல்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தை தங்களது ‘ரெளடி பிக்சர்ஸ்’ சார்பாக தயாரித்துள்ளது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. ஏற்கனவே, இப்படம், நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்ற முதல் தமிழ் படமாக சாதனையும் செய்தது. உக்ரைனில் நடக்கும் ‘மோலோடிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’விலும் திரையிட கூழாங்கல் தேர்வானது.

இந்த நிலையில், தற்போது, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற 14 படங்களில் யோகி பாபுவின் ‘மண்டேலா’ படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது