ஆர்யன் ஷாம் நடித்த ‘அந்த நாள்’ படம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளைக் குவிக்கிறது..!

0
140

ஆர்யன் ஷாம் நடித்த ‘அந்த நாள்’ படம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளைக் குவிக்கிறது..!

விரைவில் வெளியாகவிருக்கும் ‘அந்த நாள்’ என்ற தமிழ்த் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே உலகமெங்கும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது.

இந்த அந்த நாள் படத்தை க்ரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ரகுநந்தன் தயாரித்துள்ளார்.

இந்த ‘அந்த நாள்’ படத்தில் ஆர்யன் ஷ்யாம் கதாநாயகனாக நடிக்கிறார், மேலும் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ்.பாபு முன்னணி ஹீரோயின்களாகவும், கிஷோர் ராஜ்குமார் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த ‘அந்த நாள்’ படத்தை வி.வி.கதிரேசன் இயக்கியுள்ளார். கதை மற்றும் திரைக்கதையை ஆர்யன் ஷ்யாம் எழுதியுள்ளார்.

இந்த ‘அந்த நாள்’ நரபலி மற்றும் Black Magic கருவாக கொண்ட திரைப்படம். அதனால் இந்தப் படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டது. பின்னர் ரிவிசிங் கமிட்டியிடம் அப்பீல் செய்து படத்திற்கான தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது.

இந்த ‘அந்த நாள்’ படம் உலகமெங்கும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 8 அதிகாரப்பூர்வமான விருதுகளை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளவிதம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது.

இப்படத்தின் இயக்குநரான வி.வி.கதிரேசன் ‘EUROPE FILM FESTIVAL’ விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும், அறிமுக நடிகரான ஆர்யன் ஷியாம் ‘NEWYORK MOVIE AWARDS’, ‘AMERICAN GOLDEN INTERNATIONAL FILM FESTIVAL’, ‘MEDUSA FILM FESTIVAL’, ‘WORLD FILM CARNIVAL SINGAPORE’ உள்ளிட்ட 4 சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘சிறந்த நடிகருக்கான விருதை’யும் பெற்றுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முயற்சியால் ஈர்க்கப்பட்ட ஆர்யன் ஷ்யாம், ‘அந்த நாள்’ படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார்.

மேலும் சமீபத்தில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ஆர்யன் ஷ்யாமை வாழ்த்தி விரைவில் அவருடன் ஒரு படத்தில் பணியாற்றுவது குறித்தும் விவாதித்துள்ளார்.