ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கார் விருது வென்றதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

0
181

ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கார் விருது வென்றதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கார் விருது வென்றதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித்ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்றதன் மூலம் வரலாறு படைத்துள்ள இந்த நாள் இந்திய சினிமாவுக்கு மிக முக்கியமான நாளாகும். இந்தப் பாடல் இந்தியர்கள் மற்றும் உலகில் உள்ள இசை ரசிகர்கள் அனைவரது உதடுகளாலும் ஒலிக்கப்படுகிறது. ஆர்ஆர்ஆர் குழுவுக்கு வாழ்த்துகள் @ssrajamouli @mmkeeravaani @boselyricist @tarak9999 @AlwaysRamCharan.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திரு. அமித்ஷா வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“தி எலிபெண்ட் விஸ்பெரர் ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றதற்கு @EarthSpectrum மற்றும் @guneetm ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்தப் படம் யானைகளைக் காப்பதில் இந்தியாவின் முயற்சிகளை முன்னிலைப்படுத்துகிறது. இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள விருது இந்தியத் திரைப்படத் துறையின் ஆற்றலை எடுத்துரைப்பதுடன் இளம் திரைப்படத் துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.”