‘ஆர்ஆர்ஆர்’ திரைப்பட விமர்சனம்: ‘ஆர்ஆர்ஆர்’ (RRR) ராஜமௌலியின் இன்னொரு ஆக்ஷன் ஆக்ரோஷம் நிறைந்த கிளாசிக் மாஸ்டர் பீஸ் | மதிப்பீடு: 3/5
நடிகர்கள்: என்டிஆர், ராம் சரண், அலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ராகுல் ராமகிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை: கே.வி. விஜயேந்திர பிரசாத்
திரைக்கதை உருவாக்கம்: எஸ்.எஸ். காஞ்சி
தமிழ் உரையாடல்கள்: மதன் கார்க்கி
ஒளிப்பதிவு: கே.கே செந்தில் குமார்
இசை: எம்.எம் கீரவாணி
பேனர்: டிவிவி என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்: டிவிவி தனய்யா
திரைக்கதை & இயக்கம்: எஸ்.எஸ்.ராஜமௌலி
தமிழ்நாடு வெளியீடு: லைகா புரொடக்ஷன்ஸ்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
RRR கதை தெலுங்கானாவில் நிஜாம் ஆட்சி செய்யும் ஒரு பழங்குடி பகுதியில் தொடங்குகிறது. 1920 விசாகப்பட்டினம் அருகே அல்லூரி சீதாராம ராஜு (ராம் சரண்) ஆங்கிலேய அரசில் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். ஆங்கிலேயர்களின் கட்டளைகளை உயிரை துச்சமென மதித்து நிறைவேற்றுவதால் நற்பெயர் கிடைக்கிறது. நிஜாமைச் சந்திக்க வந்த ஒரு பிரிட்டிஷ் பிரபு (ரே ஸ்டீவன்சன்) ஒரு கோண்ட் குழந்தையை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். வழியில் எதிர்ப்பை காட்டும் தாயைக் கொன்று விட அநியாயம் என்று எதிர்க்கும் அந்தக் குழந்தையின் குடும்பம் சித்திரவதைக்கு உள்ளாகிறது. கோண்ட் பழங்குடியினரின் மேய்ப்பரான கொமரம் பீம் (NTR) இதை அறிகிறார். குழந்தையை மீட்டுக்கொண்டு வர பீம் (என்டிஆர்) தனது பெயரை அக்தர் என்று மாற்றிக்கொண்டு டெல்லி செல்கிறார். ஆங்கிலேயருக்கு எதிராக வேலை செய்பவர்களை பிடித்ததற்காக கொமுரம் பீமை பிடிக்கும் பொறுப்பை சீதாராமராஜிடம் (ராம் சரண்) ஒப்படைக்கிறது பிரிட்டிஷ் அரசு. ராம ராஜுவும் (ராம் சரண்) டெல்லி செல்கிறார். டெல்லியில், பீம் மற்றும் ராம ராஜு ஒருவருக்கொருவர் எதிர்பாராத சந்திப்பால் இருவருக்கும் இடையே நட்பு உருவாகிறது. கொமுராமின் நேர்மையும், நற்குணமும் பிடித்த சீதாராமராஜா அவருக்கு உதவுகிறார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக திரும்பியதால் சீதாராமராஜுக்கு பிரிட்டிஷ் அரசு மரண தண்டனை விதிக்கிறது. சீதாராமராஜாவை கொமுரம் காப்பாற்றுவாரா? பிரிட்டிஷ் அரசாங்கம் எவ்வாறு எதிர்ப்பை காட்டி போராடுகிறது? பீம் ஏன் தனது பெயரை அக்தர் என்று மாற்றிக்கொண்டு மாறுவேடத்தில் சுற்றினார்? பீமனும் ராமராஜாவும் சேர்ந்து என்ன செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
என்டிஆர், ராம்சரண் நடிப்பு ரசிகர்களின் மனதைத் தொடுகிறது. இரண்டு கதாபாத்திரங்களுக் கிடையேயான உணர்வுகள் மனதைக் கவரும் விதத்தில் என்டிஆர் மற்றும் ராம் சரண் இடம்பெறும் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக அமைந்து உள்ளது. இரண்டு நட்சத்திரங்களும் தங்கள் பாத்திரங்களில் நடித்த விதம், சண்டைக் காட்சிகளில் நடிப்பு சிறப்பான ஆக்ஷன் காட்சிகளால் அனைவரையும் இணைக்கும் சக்திவாய்ந்த உணர்ச்சிகளைக் காட்டி அசத்துகின்றனர். செண்டிமெண்ட் & எமோஷனல் காட்சிகளில் அவர்களது நடிப்பு ரசிக்க வைக்கிறது. என்டிஆருடன் மோதும் காட்சிகளில்… இதயம் படபடக்கும், கோபம் காட்டும் காட்சிகளில் ராம் சரண் நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஒரு வலுவான உணர்ச்சியை மனதில் சுமந்துகொண்டு எதிர் சைகைகளை வெளிப்படுத்துவது எளிதான காரியம் அல்ல. விருப்பத்திற்கு மாறாக செயல்படும் காட்சிகளில் ராம் சரண் அற்புதமாக நடித்துள்ளார். அந்த வகையில் ராம் சரண் ஒரு நடிகனாக தனது பாத்திரத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்துள்ளார்.
சீதா வேடத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். ஒலிவியா மோரிஸ் அழகாக இருக்கிறார். அஜய் தேவ்கனின் பாத்திரம் படத்திற்கு முக்கியமானது. சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ரௌரமேஷ் மற்றும் பலர் அந்தந்த கதாபாத்திரங்களின் வரம்பிற்கு ஏற்ப நடித்துள்ளனர்.
கே.கே. செந்தில் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். அவர் சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் காலத்தை யதார்த்தமான முறையில், ஹாலிவுட் ரேஞ்ச் சினிமா அனுபவத்தை இந்திய ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
சிறப்பான ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்க்கு மதன் கார்க்கியின் உரையாடல்கள் சக்தி வாய்ந்தவை, உணர்ச்சிகரமானவை மற்றும் இதயத்தைத் தொடும். தயாரிப்பு பிரமாண்டம்.
‘பாகுபலி 2’ படத்திற்கு பிறகு ராஜமௌலியின் படம்… ‘RRR’ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இரண்டு நண்பர்களுக்கு இடையே நடக்கும் கதை என்று! கொமுரம் பீமும் அல்லூரி சீதாராமராஜும் சந்தித்தால்? அது ஒரு கற்பனைக் கதை! இருப்பினும்… நிஜக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து கற்பனைக் கதை எழுதப்பட்டதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஒரு ரேஞ்சில் படமாக்கப்பட்டுள்ளன. முதலில் ராம் சரண் அறிமுகம், பிறகு என்டிஆர் அறிமுகம் (புலியுடன் சண்டை)… இடைவேளை சண்டை, இரண்டாம் பாதியில் இன்னொரு சண்டை… படத்தில் வரும் ஒவ்வொரு சண்டையும் சூப்பர். இருந்தாலும்… ஆக்ஷனுக்கு நடுவில் உள்ள உணர்ச்சிகள், கதைக்குள் சுருக்கமாகிவிட்டது. வில்லன் எவ்வளவு வலிமையாக இருக்கிறாரோ, அவ்வளவு ஹீரோயிசம் உயரும் என்று ராஜமௌலி உறுதியாக நம்புகிறார். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் அந்த வில்லனிசம் வலுவாக இல்லை. ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கதை மற்றும் உணர்ச்சிகளை விட ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஹீரோக்களை முன்னிலைப்படுத்துகிறது.
மொத்தத்தில் ‘ஆர்ஆர்ஆர்’ (RRR) ராஜமௌலியின் இன்னொரு ஆக்ஷன் ஆக்ரோஷம் நிறைந்த கிளாசிக் மாஸ்டர் பீஸ்.