ஆட்டோக்காரனாக களம் இறங்கும் சிம்பு

0
108

ஆட்டோக்காரனாக களம் இறங்கும் சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். முன்பு சிம்பு மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தாண்டி தற்போது அவர் படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. பத்து தல படத்தில் சிம்புவுடன், கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர்.

இந்நிலையில் சிம்புவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுனர் உடை அணிந்து படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.