ஆக்டர் கார்த்திகேயா கும்மகோண்டா மற்றும் லோஹிதா ரெட்டி பிரமாண்ட திருமணம் செய்து கொண்டனர்

0
132

ஆக்டர் கார்த்திகேயா கும்மகோண்டா மற்றும் லோஹிதா ரெட்டி பிரமாண்ட திருமணம் செய்து கொண்டனர்

ரசிகர்கள் மதியில் பிரபல வரவேற்ப்பிற்கு காத்து கொண்டு இருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அவர்கள் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படம், இதில் அண்டகோனிஸ்ட் வேடத்தில் வளம் வந்துள்ளார் இளம் மற்றும் நடப்பு நடிகரான கார்த்திகேயா கும்மகோண்டா. நவம்பர் 21 ஆம் தேதி ஹைதெராபாத் பிரம்மாண்டமான திருமணமாக நடந்தது, கார்த்திகேயா காலை 9:47 மணிக்கு, “தனுர் லக்னம்” மணிக்கு தனது பால்ய தோழியான லோஹிதா ரெட்டியை காதலித்து பிரமாண்ட திருமணத்தில் திருமணம் செய்து கொண்டார்.

குறைந்த விருந்தினர்கள், பிரபலங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கோலாகலமாகவே திருமணம் நடைபெற்றது.

முன்னதாக, நடிகர் ராஜா விக்ரமார்கா ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் சினிமா பாணியில் தனது வருங்கால மனைவியை திருமணத்திற்கு முன்மொழியாக முழங்காலிட்டு தனது அழகான காதலை வெளிப்படுத்தினார்.

அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் கல்லூரி நாட்களில் இருந்தே அவர்களின் அழகான காதல் கதையை போற்றும் அதே வேளையில், இந்த அழகான ஜோடி இறுதியாக தங்கள் புதிய பயணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் மற்றும் ஆசீர்வாதங்களுடன் தொடங்கியது.

இதற்கிடையில், அவரது ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் புதுமணத் தம்பதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகிறார்கள்.