”அவர்களை விட்டுவிடுங்கள்..” தனுஷ் – ஐஷ்வர்யா பிரிவு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கமெண்ட்
தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியானதில்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் திடீரென பிரிவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ்.
இவர் தமிழ் திரைப்படங்கள் தவிர இந்தி திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
தற்போது தமிழில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு 11 மணிக்கு திடீரென்று அறிவித்தார். அந்த அறிவிப்பை அவர் டுவிட்டரில் வெளியிட்டார்.
தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
திடீர் பிரிவு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘கடந்த 18 ஆண்டுகள் நண்பர்களாகவும், தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒருவர் மீது ஒருவர் நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். எங்களது வாழ்க்கை பயணம், வளர்ச்சி, புரிந்துகொள்ளுதல், அனுசரித்து செல்லுதல் ஆகியவை நிரம்பியதாக இருந்தது.
தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் தனியாக இருப்பது நல்லது என்று நினைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளோம். எங்களது இந்த முடிவை எங்களது தனிமைக்கு மதிப்பு கொடுத்து மதிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஓம் நமச்சிவாயா- அன்பை பரப்புங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் போன்றே ஐஸ்வர்யாவும் பிரிவை உறுதிப்படுத்தி தனியாக டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். இது தமிழக திரை துறையினர், ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஐஷ்வர்யாவுக்கு ஆன்மிகத்தில் எழுந்த நாட்டம்தான் விவாகரத்துக்கு காரணம், இல்லை இல்லை தனுஷ் மீது தொடர்ந்து கிசுகிசு வந்ததுதான் விவாகரத்துக்கு காரணம் என பலர் பல காரணங்களை கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களது பிரிவை ஆராய்ச்சி செய்து மேலும் அவர்களுக்கு மன உளைச்சல் கொடுக்காமல் அதனை மதிக்க வேண்டுமென்பது ஒரு தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.
தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியானதில்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் திடீரென பிரிவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.
ஐஸ்வர்யா புதிய படம் ஒன்றை இயக்குவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களது பிரிவுக்கு இது காரணம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
தனுஷ் சமீபகாலமாக இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த “அட்ராங்கி ரே” இந்தி படம் வெளியானது. இந்த படம் தமிழில் “கலாட்டா கல்யாணம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இன்னும் இந்தி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்தி பட உலகில் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரம் உள்ளது. இந்தி படங்களில் நடிப்பது தொடர்பாக அவர் ஐஸ்வர்யாவுடன் எதுவும் கலந்து ஆலோசிப்பது இல்லை. தன்னிச்சையாகவே முடிவு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது.
இந்தி படங்களில் நடித்த பிறகு அவர் குடும்பத்தின் மீது நெருக்கம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் நடிகர் தனுஷ் மீது சமீபகாலமாக ஐஸ்வர்யா கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் நடித்த படங்களில் கதாநாயகிகளுடன் அவர் நெருங்கி பழகியதை ஐஸ்வர்யா விரும்பவில்லை என்றும் அதனால் தான் இந்த பிரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
“மில்க்” நடிகை ஒருவருடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததாக சினிமா துறையில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அந்த நடிகையின் வீட்டிலேயே அவர் எப்போதும் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுபற்றி ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்ததும் அவர் தனுசை கண்டித்ததாக தெரிகிறது. ஆனாலும் தனுஷ் அதை கேட்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
மேலும் தெலுங்கு நடிகை ஒருவரிடமும் தனுஷ் நெருக்கம் காட்டி வந்தார். அதனாலும் அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேரள நடிகை ஒருவர் நடித்துள்ளார். அவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசு பரவியது.
இந்த நிலையில் அந்த நடிகை ஐஸ்வர்யாவை சந்தித்து தனுஷ் தனக்கு தொல்லை கொடுப்பதாக புகார் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தனுஷ்- ஐஸ்வர்யா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. அவர்கள் நிரந்தரமாக பிரிவதற்கு இதுவே காரணம் என்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் செய்த ட்வீட்டிற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை டேக் செய்து, “இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? இருவரையும் சேர்த்து வையுங்கள்” என பதிவிட்டார்.
அதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், “அவர்கள் மரியாதையான முறையில் பிரிகிறார்கள். ஒருவரையொருவர் அசிங்கமாக பேசாமல், முறைப்படி விவாகரத்து பெறும் முன்பு யாரையும் காதலிக்காமல் மன உளைச்சல் கொடுக்காமல் பிரிகிறார்கள். அவர்களை தனியாக விட்டுவிடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Amma @LakshmyRamki ithellam unga kannukku theriyatha .. rendu perayaum kootittu poi serthu vainga
— Libin (@libinj6) January 17, 2022
They are moving away respectfully, not causing mental trauma to each other by badmouthing publicly or romancing with someone else before getting legally divorced, pls leave them alone,
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 17, 2022