அரபிக் குத்து பாடலுக்கு அபர்ணா தாஸ் போட்ட குத்தாட்டம்… இணையத்தில் செம வைரல்!

0
125

அரபிக் குத்து பாடலுக்கு அபர்ணா தாஸ் போட்ட குத்தாட்டம்… இணையத்தில் செம வைரல்!

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அரபிக் குத்து பாடலுக்கு மலையாள நடிகை அபர்ணா தாஸ் போட்ட டான்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான அபர்ணா தாஸ், பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சென்னையில் உள்ள சன் ஸ்டுடியோவில், பீஸ்ட் படத்தின் துவக்க பூஜையில் அபர்ணா தாஸ் கலந்து கொண்டார்.

அதுமட்டுமில்லாமல், பீஸ்ட் படத்தின் 100 வது நாள் விழாவில் பூஜா ஹெக்டேவை ஓவர்டேக் செய்து இளைஞர்களின் கண்களை கவர்ந்தது அபர்ணா தாஸ் தான்…

காதலர் தினத்தில் கையில் ரோஜா பூவுடன் ” Be My Valentine? lets always celebrate love. Might Delete Later” என்ற வாசகத்தை போட்டு ரசிகர்களின் மொத்த கவனத்தையும் கவர்ந்திருந்தார் அபர்ணா தாஸ்.. பீஸ்ட் படத்தில் இவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்..

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அரபிக் குத்து பாடலுக்கு அபர்ணா தாஸ் தனது தோழியுடன் ஆடிய டான்ஸ் இன்ஸ்டாகிராமில் செம்ம ட்ரெண்டாகி தற்போது வைரலாகி வருகிறது.