அரபிக் குத்து பாடலுக்கு ஷில்பா ஷெட்டி, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அட்டகாச நடனம்!

0
114

அரபிக் குத்து பாடலுக்கு ஷில்பா ஷெட்டி, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அட்டகாச நடனம்!

அரபிக் குத்து பாடலுக்கு நடனம்அரபிக் குத்து பாடலுக்கு நடனம்
அரபிக் குத்து பாடலுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஜான் ஆப்ரஹாம், ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோருடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங்கும் நடனமாடியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸை குவித்து வருகிறது.

நடிகர் விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், ஜான் ஆப்ரஹாம் ஆகியோருடன் ரகுல் ப்ரீத் சிங் ஆடியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து காதலர் தினத்தன்று பீஸ்ட் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடியுள்ளனர். பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அரபிக் குத்துபாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது அரபிக் குத்து பாடலுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஜான் ஆப்ரஹாம், ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோருடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங்கும் நடனமாடியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸை குவித்து வருகிறது.

விஜய்யுடன் குஷி படத்தில் மேக்கரீனா பாடலுக்கு நடனமாடியிருந்த ஷில்பா ஷெட்டி, மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் ஒத்து பாடலுக்கும் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்தப் பாடலும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.