அமேசான் ப்ரைம் வீடியோவில் அதிரடி திரைப்படம் யுவரத்னாவின் டிஜிட்டல் சிறப்புக் காட்சி

0
168

அமேசான் ப்ரைம் வீடியோவில் அதிரடி திரைப்படம் யுவரத்னாவின் டிஜிட்டல் சிறப்புக் காட்சி

அமேசான் ப்ரைம் வீடியோ புனீத் ராஜ்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் தனஞ்சயா
ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான அதிரடி திரைப்படமான
யுவரத்னாவின் டிஜிட்டல் சிறப்புக் காட்சியை அறிவித்தது

சந்தோஷ் ஆனந்த்ராம் எழுதி இயக்கிய விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தை ஹோம்பேல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார், மற்றும் இதில் புனீத் ராஜ்குமார், சாயீஷா, சோனு கௌடா, தனஞ்சயா, மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்

யுவரத்னா திரையரங்குகளில் வெளியான ஒரே வாரத்தில் இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த ப்ரைம் உறுப்பினர்கள், ஏப்ரல் 9, 2021 முதல் ஸ்ட்ரீம் செய்து பார்த்து மகிழலாம்

அமேசான் ப்ரைம் வரம்பற்ற ஸ்டீமிங்க் மூலம், சமீபத்திய மற்றும் பிரத்யேக சிறப்புத் திரைப்படங்கள், டிவி தொடர்கள், ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள், அமேசான் ஒரிஜினல்கள், அமேசான் ப்ரைம் மியூசிக் மூலம் விளம்பரங்கள் இல்லாத இசை ஆகியவற்றை அளிப்பதோடு,, மிகப்பெரிய அளவிலான எண்ணிக்கையில் உள்ள இந்திய தயாரிப்புகளை விரைவாகவும் இலவசமாகவும் விநியோகிக்கிறது. முதல் தரமான சலுகைகளை எளிமையாக அணுகும் வசதி,, ப்ரைம் ரீடிங் மூலமாக வரம்பற்ற வாசிப்பு, மற்றும் ப்ரைம் கேமிங் மூலம் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், இவை அனைத்தையும் வருடத்திற்கு ரூ.999 உறுப்பினர் சந்தா மூலம் நம்பமுடியாத அளவு மதிப்புமிக்க சேவைகளை அளிக்கிறது.

ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷனுக்கு சந்தா செலுத்தியும் வாடிக்கையாளர்கள் யுவரத்தினாவை காணமுடியும். ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷன் மொபைலுக்கென்றே உருவாக்கப்பட்ட தனிநபர் பயன்பாட்டுத் திட்டம், அது தற்போது ஏர்டெல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.. ,

மும்பை, ஏப்ரல் 8, 2021: அமேசான் ப்ரைம் வீடியோ இன்று பிரதியேக ஸ்ட்ரீமிங் சேவைகளில் அதிரடி கன்னட திரைப்படமான, யுவரத்தினா வின் டிஜிட்டல் சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது. யுவரத்னா, கல்லூரி வளாகத்தின் பின்னனியில் மனித மதிப்பீடுகள் குறித்து விளக்கும் ஒரு கதை. சந்தோஷ் ஆனந்த்ராம் எழுதி இயக்கி ஹோம்பேல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இந்த ‘யுவரத்தினா’’ என்ற திரைப்படத்தில், சாயீஷா, தனஞ்சயா, திகந்த் மஞ்சாலே, சோனு கௌடா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவரத்னா திரையரங்குகளில் வெளியான ஒரே வாரத்தில் இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த ப்ரைம் உறுப்பினர்கள், ஏப்ரல் 9, 2021 முதல் ஸ்ட்ரீம் செய்து பார்த்து மகிழலாம் கல்வி அமைப்பை தனியார்மயமாக்கும் அரசியல் தொடர்புகளால் மூடப்படும் நிலைக்குச் செல்லும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியைச் சுற்றி யுவராத்னாவின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்தக் கல்லூரியின் முதல்வர் தனியார்மயமாக்கலுக்கு எதிராகப் போராடுகிறார். ராஷ்ட்ரகுடா பல்கலைக்கழகத்தில் ஒரு பொறியியல் மாணவனாகச் சேரும் அர்ஜூன் அதாவது புனீத் ராஜ்குமார், அவரது இயக்கத்துக்கு ஆதரவாக இருக்கிறார்.
அதன் பின் என்ன நடந்தது? அவர்களது முயற்சியில் அவர்கள் வெற்றி காணுவார்களா? பல மயிர்க்கூச்செறியும் சம்பவங்கள் நிறைந்த நிக்ழ்வுகளை ஏப்ரல் 9 அன்று தொடங்கும் யுவரத்னாவின் அமேசான் டிஜிட்டல் வெளியீட்டில் காணலாம்.

அமேசான் ப்ரைம் வீடியோ கன்டெண்ட் இயக்குனரும் தலைவருமான விஜய் சுப்ரமணியம், தனது எண்ணங்களைப் பகிந்துகொண்ட பொழுது கூறினார், “பல்வேறு கலைவடிவங்கள், மொழிகள் ஆகியவற்றின் மிகச்சிறந்த பொருளடக்கங்களை வழங்குவதற்கு, அமேசான் ப்ரைம் வீடியோ எப்போதுமே நாட்டிலுள்ள மிகச்சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் கூட்டு சேர்வதில் முனைப்போடு செயல்படுகிறது. ஹோம்பேல் ஃபிலிம்ஸ் உடனான எங்கள் உறவு தொடர்வது குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அமேசான் ப்ரைம் வீடியோவின் வரிசையில் ஏற்கனவே உள்ள எழுச்சியூட்டும், குதூகலமான கன்னட திரைப்படங்களோடு கூடுதலாக இணையும் ஒரு தரமான திரைப்படம் யுவரத்னா. திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றிகளை இந்தத் திரைப்படம் குவித்திருக்கிறது மற்றும் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட்டப்பட்ட சில நாட்களிலேயே எங்களது உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியோடிருக்கிறோம்.”

“ஒரு இயக்குனரின் கண்ணோட்டத்திற்கு எவ்வாறு உயிர் கொடுப்பது என்பதை புனீத் ராஜ்குமார் நன்கு அறிவார் மற்றும் அவருடன் பணியாற்றுவது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கும் செயல்பாடு என்பதற்கு அது ஒன்றே காரணமாகத் திகழ்கிறது. யுவரத்னாவின் வெற்றியைத் தொடர்ந்து அவருடன் மற்றொரு மிகப்பெரிய வெற்றித் திரைப்படத்தை உருவாக்குவதில் நான் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறேன்” என்று இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கிய சந்தோஷ் ஆனந்த்ராம் கூறினார். “ கதை மற்றும் அதன் பொருளடக்கத்துக்குப் பொருத்தமான திரை நட்சத்திரங்களின் கூட்டம் தொடங்கி இந்தப்படத்தில் எதிபார்க்கக்கூடிய பல அம்சங்கள் இருக்கின்றன. திரையரங்குகளில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை மேலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தோடு பகிர்ந்து கொள்ள விரும்பினோம். அதன் மூலம் அனைவரும் அவர்களது இல்லத்தில் அமர்ந்து கொண்டே இந்த திரைப்படத்தை ரசிக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த டிஜிட்டல் வெளியீடு அற்புதங்களை நிகழ்த்தும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதிரடி, உணர்வுகள், சிரிப்பு மற்றும் கொஞ்சம் காதல் ஆகிய உணர்ச்சிக் கலவையோடு இந்த திரைப்படம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறது.”

இந்த டிஜிட்டல் வெளியீட்டுக்கு முன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட இதன் முன்னணி கதாநாயக நடிகர் புனீத் ராஜ்குமார், கூறினார், “ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்தோஷ் ஆனந்த்ராம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது, சொந்த வீட்டிற்கு திரும்பியது போன்ற உணர்வைத் தருகிறது. இந்தத் திரைப்படம் தொடர்புடைய முக்கியமான நிகழ்வுகளை முன்னிறுத்துகிறது, நகைச்சுவையான அதிரடி உரையாடல்கள், அதிதீவிரமான சண்டை காட்சிகள் மற்றும் மனதை உருக்கும் சம்பவங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குச் சித்திரமாக இது விளங்குகிறது. இதன் இமாலய வெற்றியை எங்களது முழு தயாரிப்புக் குழுவிடமும் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். அமேசான் ப்ரைம் வீடியோவின் உலகளாவிய ரசிகர்களுக்கான டிஜிட்டல் வெளியீட்டை காண ஆவலோடு காத்திருக்கிறேன்.”

“அமேசான் ப்ரைம் வீடியோவில் யுவரத்னாவை வெளியிட ஹோம்பேல் பிலிம்ஸ் தயார் நிலையில் உள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறினார், “தற்போதைய பெருந்தொற்று சூழ்நிலையில், இந்த மிகக்சிறந்த திரைப்படத்தை மிகப்பெரிய எண்ணிக்கையில் ரசிகர்களை குறிப்பாக குடும்பங்கள் மற்றும் மூத்த வயதினரைச் சென்றடையச் செய்வதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. ரசிகர்கள், திரைப்படத்துறையினர் மற்றும் எங்களது நலம் விரும்பிகள் அனைவரது ஆதரவையும் நாங்கள் வேண்டுகிறோம். “‘யுவரத்னாவிற்கு” அளித்த பேராதரவுக்கு நான் அனைத்து ரசிகர்களுக்கும் அத்தோடு இந்தத் திரைப்படத்தை மேலும் அதிக ரசிகர்களைச் சென்றடைய உதவிய அமேசான் ப்ரைம் வீடியோவிற்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். யுவரத்னாவின் வலிமையை காண்பதற்கும் உணர்வதற்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!”

ப்ரைம் வீடியோவின் பட வரிசையில் உள்ள ஆயிரக்கணக்கான தொலைக்காட்சித் தொடர்கள் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களோடு யுவரத்னாவும் இணைந்து விடும். இவற்றில் உள்ளடங்கியவை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ப்ரைம் வீடியோ தொடர்களான மிர்சாபூர் சீசன் 1 & 2, காமிக்ஸ்டான் செம காமெடிப்பா, பிரீத்: இன் டு தி ஷேடோஸ், பாண்டிஷ் பாண்டிட்ஸ், பாதாள் லோக், ஃபர்க்காட்டன் ஆர்மீ – ஆசாதி கே லியே, சன்ஸ் ஆஃப் தி சாயில்,: ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃஃபேமிலி மேன், மேட் இன் ஹெவன், மற்றும் இன்சைடு எட்ஜ், இந்திய திரைப்படங்களான கூலி நம்பர் 1, குலாபோ சிதாபோ, துர்க்காமதி, சலாங்க், சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், ஃப்ரெஞ்ச் பிரியாணி, லா, சுஃப்பியும் சுஜாதாவும், பெங்க்வின், நிசப்தம், திரிஷ்யம் 2, மாரா, வி, சி யு சூன், சூரரைப் போற்று, பீம சேனா நள மஹாராஜா, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளாஸ் மெலடீஸ், புத்தம் புதுக் காலை, அன் பாஸ்ட் மற்றவைகள் பலவற்றோடு விருதுகள் வென்ற சில திரைபடங்கள். மற்றும் விமரிசன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற குளோபல் அமேசான் ஒரிஜினல்களான, கமிங் 2 அமெரிக்கா, போராட் சப்ஸிக்வெண்ட் மூவி பிலிம், டாம் கிலான்சியின் ஜாக் ரையான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக், மற்றும் தி மார்வாலஸ் மிஸஸ் மைசெல். இவை அனைத்தும் அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்கு எந்த விதமான கூடுதல் கட்டணமுமின்றி கிடைக்கிறது. இந்த சேவையில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலயாளம், பன்ஜாபி, மற்றும் பெங்காலி மொழிகளும் அடங்கும்.

சிறப்பு டிவிக்கள், கைபேசி கருவிகள், ஃபயர் டிவி, ஃபயர் திட்வி ஸ்டிக், ஃபயர் கைக்கணினிகள், ஆப்பிள் டிவி, போன்றவைகளுக்கான ப்ரைம் வீடியோ ஆப் மூலம் ப்ரைம் உறுப்பினர்கள் யுவராத்னாவை எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் காணலாம். ப்ரைம் வீடியோ ஆப்பிலிருந்து அவர்கள் கைபேசி மற்றும் கைக்கணினி கருவிகளில் தொடர் நிகழ்ச்சிகளை தரவிறக்கம் செய்து கொண்டு பின்னர் இணைய தொடர்பு இல்லாத நிலையிலும் எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி காணலாம். வருடத்திற்கு ரூ. 999 மட்டுமே செலுத்தும் ப்ரைம் உறுப்பினர்களுக்கு, வேறு எந்த ஒரு கூடுதல் கட்டணமுமின்றி இந்தியாவில் ப்ரைம் வீடியோ கிடைக்கிறது., புதிய வாடிக்கையாளர்கள் மேலும் தகவல்களை அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்: www.amazon.in/prime.

அமேசான் பிரைம் வீடியோ பற்றி
பிரைம் வீடியோ என்பது ஒரு பிரீமியம் ஸ்ட்ரீமிங் சேவையாகும், முக்கிய உறுப்பினர்களுக்கு விருது பெற்ற அமேசான் ஒரிஜினல் தொடர்கள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பை இது வழங்குகிறது—நீங்கள் விரும்பும் அனைத்தையும் ஒரே இடத்தில் எளிதாகக் கண்டுகளிக்கும் வசதியுடன் .இது கிடைக்கிறது. மேலதிக தகவல்களுக்கு வருகை தரவும் PrimeVideo.com.

● பிரைம் வீடியோவில் அடங்குபவை: ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் யுவரத்னா இணைகிறது, இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் அசல் தொடர்களான ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்!, தி ஃபேமிலி மேன், மிர்சாபூர், இன்சைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன், மற்றும் விருது பெற்ற மற்றும் விமர்சர்களால் பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் திருமதி மைசெல் உள்ளிட்ட தொடர்கள் முக்கிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரம்பற்ற ஸ்ட்ரீமிங்கின் ஒரு பகுதியாக கிடைக்கின்றது. பிரைம் வீடியோவில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளில் தலைப்புகளை கொண்டவைகளும் உள்ளன
● உடனடி அணுகல்: ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி மற்றும் பல கேமிங் சாதனங்களுக்கான பிரைம் வீடியோ செயலியில் உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
● மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் 4K அல்ட்ரா எச்டி- மற்றும் ஹை டைனமிக் ரேஞ்ச் (HDR) உள்ளடக்கங்களை அதற்கான சிறப்புகளுடன் கண்டு களியுங்கள். IMDb யால் இயக்கப்படும் பிரத்யேக எக்ஸ்-ரே அணுகல் உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மேலதிக விவரங்களை உங்களுக்கு அளிக்கும். பார்ப்பதாற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை மொபைலில் பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனில் பின்னர் பார்க்க சேமித்து வைக்கலாம்..
● பிரைமுடன் சேர்ந்து கிடைக்கிறது: இந்தியாவில் பிரைம் ஆண்டு சந்தாவுடன் ₹999 க்கு பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் செலவில்லாமல் பிரைம் வீடியோ கிடைக்காது.