‘அமுதும் தேனும்’  –  மறைந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 87ஆவது பிறந்தநாள் விழா

0
546

‘அமுதும் தேனும்’  –  மறைந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 87ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாகவும், நடனக்கலைஞராகவும் வலம்வந்த ராஜசுலோச்சனா, குலேபகாவலி, என் தங்கை, பாரதவிலாஸ், இதயக்கனி, சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 1950 முதல் 1980 வரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ராஜசுலோச்சனாவின் கலையுலக சேவையைப் பாராட்டி, அவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

கடந்த 2013ஆம் ஆண்டில் இம்மண்ணை விட்டுப் பிரிந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 87ஆவது பிறந்தநாளான இன்று, அவரது திரைப்பயணத்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், சென்னை தி.நகரில் ‘அமுதும் தேனும்’ விழா நடைபெற்றது. ஜி.எல். ட்ரஸ்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், 60 மற்றும் 70களின் புகழ்பெற்ற நடிகைகளான சி.ஐ.டி.சகுந்தலா, ஜெயமாலினி, ஜெயமாலா, சுச்சுசரிதா, ரேவதி, மற்றும் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், நடனக் கலைஞரும், நடிகையுமான கலைமாமணி ராஜசுலோச்சனாவின் புகழ்பெற்ற திரைக்காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன. மேலும், நடிகை ராஜசுலோச்சனாவின் மகளான திருமதி.தேவி கிருஷ்ணாவின், ஸ்பாட்லைட் வித் தேவி என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது.

ALSO READ:

AMUDUM THAENUM – 87th Birth Anniversary of Veteran Actress Smt Rajasulochana held in chennai