அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், காமிக்ஸ் துறையில் (AVGC) தொழில்துறை – திறன் தொடர்புகளை வலுப்படுத்துதல் குறித்த ஆலோசனை நிகழ்ச்சி

0
63

அனிமேஷன்விஷூவல் எஃபெக்ட்ஸ்காமிக்ஸ் துறையில் (AVGC) தொழில்துறை – திறன் தொடர்புகளை வலுப்படுத்துதல் குறித்த ஆலோசனை நிகழ்ச்சி

புதுதில்லி, டிஜிட்டல் கல்வி மற்றும் ஆற்றல் திறன் அமலாக்கம் மூலம் தற்சார்பு நிலையை அடைதலின் ஒரு பகுதியாக, கல்வித்துறையில் நிதிநிலை அறிக்கை 2022 அமலாக்கம் குறித்த இணைய கருத்தரங்கு இன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திரமோடி உரையாற்றினார்.  சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சர்கள், கல்வி, திறன் மேம்பாடு,  அறிவியல்,  தொழில்நுட்பத்துறைகளை சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், காமிக்ஸ் துறையில்( AVGC) தொழில்துறை-திறன் தொடர்புகளை வலுப்படுத்துதல் குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை டெக்னிகலர் இந்தியா அமைப்பின் தலைவர் திரு .பிரன் கோஸ் நடத்தினார். இந்த அமர்வுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு. அபூர்வ சந்திரா மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. அதுல் திவாரி ஆகியோரும் தலைமை தாங்கினர். பல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திரு. பிரன் கோஷ் பேசுகையில், பட்ஜெட் அறிவிப்புகளை, பொருளாதாரத்தில் நனவாக்குவது எப்படி என்பது குறித்து இந்த அமர்வு கவனம் செலுத்துவதாக கூறினார்.

திரு. அபர்வ சந்திரா பேசுகையில், பட்ஜெட் உரையில் ஏவிஜிசி குறித்த அறிவிப்பு முக்கியமானது என்றும், இது ஏவிஜிசி துறையின் முக்கியத்துவத்தையும்,  மற்றும் நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இதன் பங்கையும் அங்கீகரிக்கிறது என்றும் கூறினார்.

திரு. அதுல் திவாரி பேசுகையில், ‘‘நீண்டகாலமாக ஏவிஜிசி துறை அங்கீகரிக்கப்படவில்லை என்றும், தற்போது இந்த துறை அங்கீகரிக்கப்படுவது மட்டும் அல்லாமல், வேகமாக வளர்ந்து வருவதாகவும், தற்போது இத்துறையில்  திறமைசாலிகள், முதலீடு, கல்வி ஆகியவை தேவை’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய புனார்யுக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. ஆசிஷ் குல்கர்னி, ‘‘ நடிகர்கள் இத்துறையை சிறப்பாக சீரமைக்கவில்லை. சினிமா தயாரிப்பில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இந்தியா, உலகளவில் அதிகமாக  திரைப்படங்களை தயாரிக்கிறது. திரைக்கதையில் இந்தியர்கள் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஏவிஜிசி துறையில் கல்வி மற்றும் திறன்கள் கிடைக்கவில்லை. 2030ம் ஆண்டுக்குள் இத்துறை குறைந்தது 20 முதல் 25 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை அளிக்கும் ’’ என்றார்.