அந்த இரவில் 10 நிமிடம் சிங்கிள் சாட் குறும்படத்திற்காக  அங்கீகாரம் அளித்த பாலசோ தியேட்டர் (Vijaya forum mall, vpalazzo) 

0
180

அந்த இரவில் 10 நிமிடம் சிங்கிள் சாட் குறும்படத்திற்காக  அங்கீகாரம் அளித்த பாலசோ தியேட்டர் (Vijaya forum mall, vpalazzo) 

முதல்முறையாக ஒரு குறும்படத்திற்காக அங்கீகாரம் அளித்த பாலசோ தியேட்டர் (Vijaya forum mall, vpalazzo) வாசலில் பேனர் (standings) வைக்கப்பட்டுள்ளது…

நடிகர் பாக்கியராஜ் அவர்களால் உருவாக்கப்பட்ட நடிகன். முதன் முதலாக ஒரு கதையின் கதை படத்தில் அறிமுகமான நடிகர். அதன் பிறகு முண்டாசுப்பட்டி, மம்பட்டியான், சவரகத்தி, பேட்டை, திமிரு பிடிச்சவன் போன்ற இதுவரை 70-கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து கொண்டு இருப்பவர். இதுமட்டுமில்லாமல் பொண்டாட்டி, நிக்குமா நிக்காதா, பெரியபழுவேட்டரையர், அந்த இரவில் உள்ளிட்ட 7 குறும்படங்களில், சிலவற்றில் சிங்கிள் ஷாட் நடிப்பிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடிப்பவர். இத்தனை பெருமக்களுக்கும் சொந்தக்காரர் யாருன்னா, தூறல் நின்னு போச்சு, இணைந்த கைகள், காதல் பரிசு உள்ளிட்ட 350-கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் சிவராமனின் மகன் தான் நடிகர் ஆதேஷ் பாலா.

அந்த இரவில் 10 நிமிடம் சிங்கிள் சாட் குறும்படம்

நடிகர் ஆதேஷ் பாலா நடித்து மற்றும் இயக்கி உள்ளார். மூன்று கதாப்பாத்திரம் ஒரே நபர் எற்று நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இந்த குறும்படத்திறக்கு இசை பல திரைப்படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்.
படத்திற்கு பின்னனி குரல் நிழல்கள் ரவி சார் கவிஞர் விஜேபி, வரிகள் எடிட்டிங் அன்பு, வளர்ந்து வரும் பி ஆர் வோ சுந்தர் பாலா, கேமரா சுபாஷ் அலெக்சாண்டர், முருகவேல் மாணிக்கம், ஆல்பர்ட், கண்ணன் போன்றோர் உதவி பெரியது. சவுண்ட் சரவணன் ராமச்சந்திரன் மற்றும் அப்துர் ரஹ்மான் ராயன். ஸ்பான்சர் நடிகர் சின்ராசு, அந்த இரவில் படத்தின் பேனர் சென்னை விஜயா போரம் மால் பலாசோ தியேட்டர் வாசலில் இருக்கிறது, குறும்படத்திற்க்கு இந்த அங்கீகாரம் இதுவே முதல் முறை…