அதிரடி சண்டை காட்சிகளுடன் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் டீசர் வெளியானது..!
மும்பை, இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் சமீபத்தில் அட்லியின் அடுத்த படமான ஜவான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.
மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் ஷாருக்கான் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்த நிலையில் ஷாருக்கான் பிறந்தநாளையொட்டி “பதான்” படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி சண்டை காட்சிகளுடன் கூடிய டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மேலும், பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
#PathaanTeaser ஐ தமிழில் பார்க்கவும். 25th January, 2023 அன்று #YRF50
இன் #Pathaan ஐ உங்களுக்கு அருகிலுள்ள பெரிய ஸ்கீரினில் மட்டுமே
பார்த்து கொண்டாடுங்கள். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில்
வெளியிடப்படுகிறது.pic.twitter.com/tLbFbpu6M7— John Abraham (@TheJohnAbraham) November 2, 2022