அதர்வாவை இயக்கும் கார்த்திக் நரேன்!

0
167

அதர்வாவை இயக்கும் கார்த்திக் நரேன்!

தனுஷின் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள இயக்குனர் கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். அண்மையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நவரசா’ படத்தில் இடம் பெற்ற ‘ப்ராஜெக்ட் அக்னி’ குறும்படம் முழு நீள திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் மற்றொரு புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இளம் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது, இந்த படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணா மூர்த்தி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.