அஜித்தின் வலிமை ஒதுங்கியதால், பொங்கல் முன்னிட்டு ரிலீசாகும் 4 படங்கள்!

0
181

அஜித்தின் வலிமை ஒதுங்கியதால், பொங்கல் முன்னிட்டு ரிலீசாகும் 4 படங்கள்!

வெள்ளிக்கிழமைகளில் பல படங்கள் ரிலீசானதெல்லாம் ஒருகாலம். தீபாவளி, பொங்கல் என பண்டிகைக் காலங்களில், வெயிட்டான படங்கள் ரிலீசாகும். நீயா நானா போட்டி இருவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே இருக்கும். பொங்கல் தினத்தில் 20 படங்கள் ரிலீசான வரலாறு எல்லாம் இருக்கிறது.

வருடந்தோறும் பொங்கல் வெளியீடுகளில் வழக்கமாக, திரையரங்குகளில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியிடப்படும். ஆனால் இந்தப் பொங்கல் பண்டிகைக்கு, ஜனவரி 13ஆம் தேதி திரைக்கு வர இருந்த நடிகர் அஜித்தின் வலிமை படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை அதே தேதியில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். சசிகுமார் நடிப்பில் உருவான கொம்பு வச்ச சிங்கமடா, காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ள நாய்சேகர், கார்பன் ஆகிய திரைப்படங்கள் வரும் 13ஆம் தேதி திரையிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’ படமும் வெளியிட அதன் தயாரிப்பாளர் ஆலோசித்து வருகிறார். இதன்மூலம் 4திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.