அசுரத்தனமான உழைப்பை, அனைவரும் தந்து உருவாக்கிய படம் ‘கேப்டன் மில்லர்’ – தனுஷ் ஓப்பன் டாக்!

0
125

அசுரத்தனமான உழைப்பை, அனைவரும் தந்து உருவாக்கிய படம் ‘கேப்டன் மில்லர்’ – தனுஷ் ஓப்பன் டாக்!

சிறு துளி பெரு வெள்ளம், 2002 லிருந்து சேர்த்த துளிகள், ரசிக பெருவெள்ளமாக வந்துள்ளது. உங்களால் தான் நான். கில்லர் கில்லர் கேப்டன் மில்லர். இந்தப்படம் பற்றி யோசித்தால் மனதில் வருவது உழைப்பு. அசுரத்தனமான உழைப்பை, அனைவரும் தந்து உருவாக்கிய படம். வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, உருவாக்கிய படம். உண்மையில் அருண் மாதேஸ்வரன் தான் இந்தப்படத்தின் டெவில். அவரும் அவர் டீமும் கொடுத்த உழைப்பைப் பார்த்த பிறகு, நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லை. நான் நிறைய புது இயக்குநரோடு வேலை பார்த்திருக்கிறேன். அருண் மாதேஸ்வரனை பார்க்கும் போது, எனக்கு வெற்றிமாறன் ஞாபகம் தான் வருகிறது. அருண் முதன் முதலில் பார்க்கும் போது, காதில் கம்மல் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடிடியூட்டோடு இருந்தார். என்ன இவர் இப்படி இருக்கிறார்? என்று தோன்றியது. கதை சொன்னார், இது எல்லாம் பண்ண முடியுமா ? என சந்தேகம் வந்தது. அவரிடமே பண்ண முடியுமா எனக்கேட்டேன், ம்ம்… பண்ணலாம் சார் என்றார். இப்போது படம் பார்க்கும் போது தான் அதன் அர்த்தம் புரிகிறது. படத்தில் மிரட்டியிருக்கிறார். பொல்லாதவன் படத்தில் தான் எனக்கு ஜீவி அறிமுகம், அங்கு ஆரம்பித்த பயணம். எனக்காக சூப்பர் ஹிட் சாங்ஸ் நிறைய பண்ணிவிட்டார். எப்போது போன் செய்தாலும், சொல்லு மச்சான் என ஓடி வருவார், ஜீவி ஐ லவ் யூ. சிவராஜ்குமார் சார் என்னோட ஃபேன் எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறார், அவரது பண்புக்கு, பணிவுக்கு நான் அடி பணிகிறேன். அப்பா பெயரைக் காப்பாற்றுவது எப்படி என்று, உங்களைப் பார்த்துத் தான் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்க, மிகப்பெரிய ஆதரவு தந்த, சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் சார், திலீப் சார் இருவரின் உழைப்பும் மிகப்பெரிது. கேப்டன் மில்லர் லுக்கை உருவாக்கிய திவ்யாவுக்கு நன்றி. கேப்டன் மில்லர் என்பதன் டேக் லைன், மரியாதைதான் சுதந்திரம் என்பதாகும். ஆனால் இங்கே எதற்கு மரியாதை இருக்கிறது?, எதற்குச் சுதந்திரம் இருக்கிறது?. எது சொன்னாலும், எது செய்தாலும், இங்குக் குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஏன் என்றே புரியவில்லை. ஒரு சின்ன கூட்டம், இதை செய்துகொண்டே இருக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் நம் வேலையைச் செய்வோம். கேப்டன் மில்லர் ஒரு உலகப்படமாக இருக்கும். ரொம்ப புதிதான படமாக, உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும். எனக்காக இங்கு வந்த மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி. ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

ALSO READ:

‘கேப்டன் மில்லர்’ ஒரு புதிய அனுபவமாக இருக்கும் – ஜீவி பிரகாஷ்
https://kalaipoonga.net/cinema/கேப்டன்-மில்லர்-ஒரு-புதி/