அகில் அக்கினேனின் ‘ஏஜெண்ட்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
102

அகில் அக்கினேனின் ‘ஏஜெண்ட்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அகில் அக்கினேனி  தற்போது சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ‘ஏஜெண்ட்’ படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே வெளியாகியுள்ள அகிலின் புகைப்படங்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘ஏஜெண்ட்’ ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். போஸ்டரில் அகில் கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு ஸ்டைலாக காட்சியளிக்கிறார். இந்த படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுரேந்தர் ரெட்டி ஏ.கே எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.