அகடு விமர்சனம் : நட்போடு செல்லும் பயணம் தடம் மாறுவதே அகடு.
சௌந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜூ தயாரித்து வெளிவந்திருக்கும் படம் அகடு.
இதில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர், ரவீனா, விஜய்ஆனந்த்ஆகியோர் நடிக்க படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இசை-ஜான் சிவநேசன், படத்தொகுப்பு-தியாகு, ஒளிப்பதிவு-சாம்ராட், நடனம்-பாலகுமார் ரேவதி, ஆண்டோ, கலை-ஏபிஆர், இணை தயாரிப்பு-சஞ்சீவ், யுவராஜ் சிங்காரவேலு, பிஆர்ஒ-குமரேசன்.
நான்கு நண்பர்கள் இன்ப சுற்றுலாவாக கொடைக்கானல் சென்;;று காட்டுப்பகுதியில் இருக்கும் தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் தங்குகின்றனர். அவர்கள் வீட்டின் எதிரே டாக்டர் தம்பதியர் தன் 13 வயது மகளுடன் வந்து தங்குகிறார். தம்பதியரின் மகள் நான்கு நண்பர்களுடன் நன்றாக பழக அனைவருமே சேர்ந்து கொடைக்கானலை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர். இதனிடையே சிறுமியும், நான்கு நண்பரில் ஒருவரான கார்த்;திக் என்பவரும் காணாமல் போகின்றனர். மற்ற அனைவரும் சேர்ந்து தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் கொடுக்கின்றனர், போலீஸ் அதிகாரி ஜான் விஜய் மூன்று நண்பர்களையும் விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார். இருந்தும் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. இறுதியில் உண்மையான குற்றவாளி யார்? எப்படி மாயமானவர்கள்? காணாமல் போனவர்கள் நிலை என்ன? என்பதே படத்தின் முடிவு.
ஜான் விஜய் முறைப்பு,விரைப்புடன் கேரட்டை மென்றபடி விசாரிப்பது சில இடங்களில் மிகையாக இருக்கிறது, ஆனால் சாமார்த்தியமாக துப்பறிந்து குற்றவாளியை பிடிப்பது மெச்சும்படி உள்ளது.
இவருடன் சித்தார்த், அஞ்சலி நாயர், ரவீனா, விஜய்ஆனந்த் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.
இவருடன் ஸ்ரீராம் கார்த்திக் நண்பர்கள்pல் ஒருவராக ஜாலியாகவும், அதே சமயம் நண்பனை தேடும் போது பதட்டத்துடன் ஒன்றி நடித்திருப்பதும், விசாரணையின் போது அடி வாங்கினாலும் தைரியமாக சந்தேகத்தை சொல்லி படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜான் சிவநேசனின் இசையும், சாம்ராட்டின் ஒளிப்பதிவும் கொடைக்கானலில் ஏழில்மிகு இயற்கையை கண் முன்னே கொண்டு வந்து அசத்தியுள்ளனர்.
தியாகுவின் படத்தொகுப்பு, ஏபிஆரின் கலையும் படத்திற்கு பக்கபலம்.
படிப்பு, பணம், புகழ் இருந்தாலும் போதைக்கு அடிமையானால் அனைத்தும் வீண் என்பதை குற்றப் பின்னணியுடன் கடைசி வரை யார் குற்றவாளி என்பதை புதிரோடு எடுத்துச் சென்று க்ளைமேக்சில் சொல்லியிருக்கும் விதம் அருமை. இதை நயம்பட கொடுத்து பட்ஜேட்டுக்கு ஏற்றவாறு சிறப்பாக இயக்கியுள்ளார் எஸ்.சுரேஷ்குமார்.
மொத்தத்தில் நட்போடு செல்லும் பயணம் தடம் மாறுவதே அகடு.