ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட் உண்மை சம்பவங்களின் அடிப்படையில், பன்மொழியில், உருவாகும் கேங்ஸ்டர் படம்!

0
344

ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட் (Filminaty Entertainment) நிறுவன தயாரிப்பில், உண்மை சம்பவங்களின் அடிப்படையில், பன்மொழியில், உருவாகிறது, திரில்லர், கேங்ஸ்டர் படம்!

மும்பை, அதிபயங்கர சுழலில் சிக்கியிருக்கும் உலகில் வாழ்கிறோம் நாம். இங்கே மனிதர்கள் தங்கள் கனவை, வாழ்வின் அடிப்படை தேவைகளை, நனவாக்க, ஒவ்வொரு அடியையும் வெகுவாக திட்டமிட்டு, சமூகத்தோடு ஒத்து வாழ முயல்கிறார்கள். ஆனால் இந்த சமூகம் முழுதையும் இருள் சக்திகள் சில, முற்றிலும் பின்னிழுத்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அந்த சக்திகள் எந்நேரமும் நம்மைச் சுற்றியே இருக்கிறது. அந்த சக்திகள் நம்மை,நமது தெருவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, காவல்துறையை கட்டுப்படுத்துகிறது, மேலும் அரசின் துறைகளில் புகுந்து அதிகாரம் செலுத்துகிறது. நாம் என்ன செய்தாலும் அந்த சக்திகளை நம்மால் தடுக்க முடியாது.

காயத்திரி சுரேஷ் தயாரிக்கும் இந்த “QUOTATIONS GANG” திரைப்படம் புத்தம் புதிய கதை ஒன்றும் அல்ல. ஏனெனில் இதில் உண்மையில் நடந்த, தினசரிகளில் நாம் படித்த சம்வங்களின் பின்னனியில் உள்ள சமூகத்தின் மறைமுக சக்திகள் எப்படி இயங்குகிறது என்பதையே, இப்படம் பேசுகிறது.

தனது திரைமொழியால் புகழ்பெற்ற, தமிழின் மிகச்சிறந்த இயக்குநரான பாலா அவர்களிடம் திரைக்கலையை பயின்ற இயக்குநர் விவேக் இந்த திரில்லர் படத்தினை இயக்குகிறார். இயக்குநர் விவேக் மிக நேர்த்தியாக, புத்தம் புதிய அணுகுமுறையில், இக்கதையினை செதுக்கியுள்ளார். இந்த திரில்லர் படத்தை தயாரிக்கும் ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட் (Filminaty Entertainment) நிறுவனம் தென்னிந்திய திரைப்படங்களான மிராப்பாகே, ஶ்ரீமன் நாராயணா மற்றும் பைசா படங்களின் இந்தி உரிமையை பெற்றுள்ளது. ரமேஷ் பப்புலா அவர்களின் மார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் ( Mars Entertainment ) நிறுவனமும் இந்த புதிய நிறுவனத்துடன் கைகோர்த்து இந்த புதிய திரில்லர் திரைப்படத்தினை தயாரிக்கிறது.

மிக கவனமாக, இந்திய அளவில் பிரபலமான, தேர்ந்த நடிப்பு திறமைகள் இப்படத்தில் நடிப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசிய விருது வென்ற நடிகை ப்ரியாமணி படத்தின் முன்னனி கதாப்பாத்திரத்தை ஏற்கிறார். இவருடன் இசை ப்ரியா புகழ் தன்யா ரஃபியா, ரெட் ரெய்ன் புகழ் விஷ்ணு வாரியர், Zee ஜி புகழ் அக்‌ஷயா, ஆகிய இளம் திறமைகள் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகரகளின் விவரவங்களை, தயாரிப்பு மற்றும் இயக்குநர் குழு சமூக வளைதள பக்கங்கள் வழியே, ரசிகர்களுக்கு பட முன்னோட்டமாக ஒவ்வொன்றாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் தகவல்கள், போஸ்டர்கள் போன்றவற்றை செப்டமபர் 7 ம் தேதி துவங்கி, அடுத்த ஒரு மாதத்தில் ஒவ்வொன்றாக சமூகவலைத்தளம் மூலம் பிரபலங்களின் வழியே வெளியிடவுள்ளனர். இப்படத்தின் தகவல்களை முதலாவதாக அறிந்துகொள்ள விழிப்புடன் சமுகவலைதள பக்கத்தினை தொடர்ந்திருங்கள்.

மயிர்க்கூச்செரியும் திரில்லர் அனுபவமான இப்படம் இந்தியா முழுதுமாக மும்பை, தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியபிரதேஷ் ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில், உண்மையான மனிதர்களின் விவரங்களோடு, ஒரு தொழில்முறை கொலைகாரனை, ஹிட்மேனை பற்றிய திரில்லராக, இரவுகளில் உறங்க விடாத திரில் அனுபவமாக இப்படம் உருவாகிறது.

ALSO READ:

FILMINATI ENTERTAINMENT TO BEGIN PRODUCTON OF A MULTI LINGUAL GANGSTER MOVIE INSPIRED FROM REAL LIFE