அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பல்வேறு தளங்களில் உலகத்திற்கு தேவையான ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகமும் ஐ.ஐ.டி. மெட்ராசும் இணைந்து ஆராய்ச்சி மையத்தை தொடங்கி உள்ளது

0
216

அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பல்வேறு தளங்களில் உலகத்திற்கு தேவையான ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகமும் ஐ.ஐ.டி. மெட்ராசும் இணைந்து ஆராய்ச்சி மையத்தை தொடங்கி உள்ளது.

சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் அமெரிக்காவின் விர்ஜினியா டெக் சர்வதேச ஆராய்ச்சி பல்கலைக்கழகம் தனது புதிய மையத்தை தொடங்கி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சர்வதேச ஆராய்ச்சி பல்கலைக்கழகமான விர்ஜீனியா பாலிடெக்னிக் மற்றும் ஸ்டேட் யுனிவர்சிட்டி, சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ்  ஆராய்ச்சி பூங்காவில் தனது புதிய ஆராய்ச்சி மையத்தை தொடங்கி உள்ளது.  இதன் மூலம் சர்வதேச அளவிலான ஆராய்ச்சிகளை ஐ.ஐ.டி மற்றும் விர்ஜீனியா டெக் இணைந்து மேற்கொள்ள உள்ளது.
இந்த ஆராய்ச்சி மையத்தை அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜீனியா டெக் தலைமைக் குழுவின் நிர்வாக துணைத்தலைவர் பேராசிரியர் சிரில் கிளார்க், சர்வதேச விவகாரங்களுக்கான துணைத் தலைவர் டாக்டர் குரு கோஷ், பேராசிரியர்கள் அசிம் எஸ்கண்ட்ரியன், நிக்கோலஸ் மற்றும் ரெபேக்கா,  தலைமை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அதிகாரியும் மூத்த துணைத்தலைவருமான பேராசிரியர். டான் சூய், பேராசிரியர் விஸ்வநாத் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிரில் கிளார்க், விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம் கல்வி மட்டுமின்றி, உயர்தர ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். சர்வதேச பலகலைக்கழகமான இதற்கு தரமான கூட்டணி, சரியான இடங்களில் வேண்டும் என்பதால் ஐ.ஐ.டி மெட்ராஸ் உடன் இணைந்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.
பேட்டி: சிரில் கிளார்க், நிர்வாக துணை தலைவர், விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம்.
150 வருட பாரம்பரியம் கொண்ட அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம், உலகின் 20 தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது என்று கூறிய தொழில்நுட்ப இயக்குனர், பேராசிரியர் விஸ்வநாத் வெங்கடேஷ் ஆசியாவில் அதன் ஆராய்ச்சி மையத்தை ஐ.ஐ.டி. மெட்ராஸ் உடன் இணைந்து தொடங்கி உள்ளது என்றார். இதன் மூலம் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பல்வேறு தளங்களில் உலகத்திற்கு தேவையான ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.