UGET 2021 ற்கான COMEDK – Uni-GAUGE நுழைவுத் தேர்வு: விண்ணப்பத்தேதிகள் அறிவிக்கப்பட்டன

0
285

UGET 2021 ற்கான COMEDK – Uni-GAUGE நுழைவுத் தேர்வு: விண்ணப்பத்தேதிகள் அறிவிக்கப்பட்டன

400 மையங்களில் 80000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, ஏப்ரல், 2021: COMEDK UGET மற்றும் Uni-GAUGE நுழைவுத் தேர்வு ஜூன் 20, 2021 அன்று ஒரு ஒருங்கிணைந்த தேர்வாக நடைபெறும். கர்நாடகா ப்ரொஃபஷனல் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் Uni-GAUGE யூனி-கேஜ் உறுப்பினர் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடன் இணைந்த கல்லூரிகளுக்கான B.E / B.Tech. சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு நடைபெறும். இந்தியா முழுவதும் 400 க்கும் மேற்பட்ட சோதனை மையங்களுடன் 150 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும், இந்த ஆண்டு இத்தேர்வுக்கு சுமார் 80,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் www.comedk.org அல்லது www.unigauge.com இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும். 22 மார்ச் 2021 முதல் 20 மே 2021 வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

COMEDK இன் நிர்வாக செயலாளர் டாக்டர் குமார் பேசுகையில் “கர்நாடகா பொறியியல் கல்வியில் முன்னோடியாக இருப்பதுடன் நாடு முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களுக்கு எப்போதும் ஒரு விருப்பமான இடமாக இருந்து வருகிறது. பல்லாண்டுகளாக, கர்நாடகாவிற்கு வெளியில் இருந்து நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டோம். 2020-இல் தொற்றுநோய் காரணமாக சேர்க்கைகளில் சரிவு ஏற்பட்டபோது, நாம் ஒரு மாறுபாட்டை உணர்ந்தாலும் இவ்வாண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் காரணமாக மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்” என்றார்.

ALSO READ:

COMED K- Uni-GAUGE entrance exam for UGET2021: Application dates announced

மேலும் “கடந்த 15 ஆண்டுகளாக தேசிய அளவில் இத்தேர்வு நன்றாக நடப்பதற்காக தேவையான வசதிகளை COMEDK செய்து வருகிறது: இந்த ஆண்டும் தேர்வு மற்றும் சேர்க்கைகள் பாதுகாப்பாக நடத்தப்படும் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம்” என்று டாக்டர் குமார் கூறினார்.

ERA அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பி. முரளிதர் பேசுகையில் “கடந்த ஆண்டு கோவிட் தீவிரம் இருந்த போதிலும், நாங்கள் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடித்து 392 மையங்களில் தேர்வை நடத்தினோம். மாவட்ட அளவில் பயணத்தைத் தவிர்த்து மாணவர்களுக்கு உதவும் வகையில் நாங்கள் தேர்வு மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்திருந்தோம். 2020 இல் இரண்டு மாற்று நேரங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் சுமார் 60000 மாணவர்கள் பங்கேற்றனர்,” கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகிறார், “இந்த ஆண்டு, ஒவ்வொரு மையமும் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் எங்கள் பாதுகாப்பு தரங்களை மேம்படுத்தி, சமூக தூரத்தை உறுதிப்படுத்துவதற்கு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 150 நகரங்களில் மையங்களின் எண்ணிக்கை 392 லிருந்து 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இதன் மூலம், மாணவர்களின் பயணம் செய்யும் அவசியம் கட்டுபட்டு குறைந்துள்ளது. தேர்வு நேரம் காலை 09:00 மணிக்கு தொடங்கி மதியம் 12:00 மணிக்கு, மற்றும் பிற்பகல் 2:00 மணி முதல். மாலை 5:00 மணி வரை என இரண்டு அமர்வுகளில் நடத்தப்படும்.”

ComedK – Uni- GAUGE, தனியார் பொறியியல் தேர்வில் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் வகையிலான 180+ நிறுவனங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இந்தியாவில் இரண்டாவது பெரிய பல பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் 150 நகரங்கள் மற்றும் 400 சோதனை மையங்களைக் கொண்டு குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்துள்ளது.

முழுமையான விண்ணப்பம் மற்றும் தேர்வு செயல்முறைகள் ஆன்லைனில் இருக்கும். ஆன்லைன் தேர்வு மற்றும் விண்ணப்ப செயல்முறை பற்றிய விரிவான செயல்முறை வழிகாட்டல் www.comedk.org அல்லது www.unigauge.com இல் மாணவர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

குறிப்பு: www.comedk.org என்பது COMEDK இன் ஒரே அதிகாரப்பூர்வ இணையதளமாகும். மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து தகவல் புதுப்பிப்புகள் மற்றும் பயன்பாட்டு செயல்முறைக்கு இந்த அதிகாரப்பூர்வமான இணையதளத்தை மட்டுமே பயன்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்