SIM cards | சிம் கார்டுக்கு தொலை தொடர்புத்துறை புதிய அறிவிப்பு!
இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சர்வதேச ரோமிங் சிம் கார்டுகள் மற்றும் உலக அழைப்புக் கார்டுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்கவும், புதுப்பிக்கவும் வகைசெய்யும் கொள்கையை தொலை தொடர்புத்துறை மாற்றியமைத்துள்ளது
தொலைத்தொடர்பு துறை மேற்கொண்டுள்ள கொள்கை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சர்வதேச ரோமிங் சிம் கார்டுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்கவும், புதுப்பிக்கவும் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ட்ராய்-இன் பரிந்துரைகளுக்கு ஏற்ப தொலைத் தொடர்புத்துறை விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. வெளிநாட்டுக்குச் செல்லும் இந்தியர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இந்த மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆட்சேபனையில்லாத சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள், நுகர்வோர் சேவை, தொடர்பு விவரங்கள், தொலைத் தொடர்பு பில்கள், கட்டணத் திட்டங்கள் போன்ற விவரங்களை வழங்க மாற்றியமைக்கப்பட்ட கொள்கை, வகை செய்யும். நுகர்வோர் குறைதீர்ப்பு நடைமுறைகளை காலவரையறைக்குள் மேற்கொள்ளவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது.