R.R. சரத் சிங் எழுதிய SKY MONK புத்தகத்தை விஜயநகர இளவரசி வித்யா கஜபதி ராஜு சிங் மற்றும் மியான்மர் நாட்டின் கவுரவ தூதர் பேராசிரியர். ஜே. ரங்கநாதன் ஆகியோர் வெளியிட்டனர்

0
174

R.R. சரத் சிங் எழுதிய SKY MONK புத்தகத்தை விஜயநகர இளவரசி வித்யா கஜபதி ராஜு சிங் மற்றும் மியான்மர் நாட்டின் கவுரவ தூதர் பேராசிரியர். ஜே. ரங்கநாதன் ஆகியோர் வெளியிட்டனர்

சென்னை தி.நகரில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் நட்சத்திர விடுதியில் SKY MONK புத்தக வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
 இன்றைய வேகமான உலகில், லட்சியமிக்க இளைஞர்களை உருவாக்குவதை  நோக்கமாகக் கொண்டு ஆர்.ஆர். சரத் சிங் எழுதிய இந்த புத்தகத்தை தலைமை விருந்தினராக கலந்து கொண்ட விஜயநகர இளவரசி வித்யா கணபதி ராஜு சிங், மற்றும் மியான்மருக்கான கவுரவ தூதர் பேராசிரியர் ஜே. ரங்கநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்தப் புத்தகம் ஒருவரது ஆற்றலைத் திறப்பதற்கான கொள்கைகளை ஆராய்ந்து,  சிறந்ததை அடைய முயற்சிப்பவர்களுக்கு, நுண்ணறிவை விதைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.  தனிநபர் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான ஒரு வரைபடமாகவும்,  வெற்றியைத் தேடுபவர்களுக்கு இன்றியமையாததாகவும், இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.
புத்தக வெளியீட்டு விழாவின் போது, உரையாற்றிய இளவரசி வித்யா கணபதி ராஜு சிங் SKY MONK, கனவுகள் காணும் இளைஞர்கள் அதனை செயல்படுத்தும் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் வழங்கும் இந்த புத்தகம் ஒரு கலங்கரை விளக்கம் என  குறிப்பிட்டார்.
மியான்மர் நாட்டின் கௌரவ தூதர் பேராசிரியர் ஜே. ரங்கநாதன்,  எதிர்காலத் தலைவர்களை வடிவமைப்பதில் புத்தகத்தின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.  இந்த புத்தகம் ஒரு வழிகாட்டி மட்டுமல்ல என்றும், இது தனிநபர்கள் தங்கள் மனவலிமையால் உச்சத்தை அடைய  ஊக்குவிக்கும்  தத்துவம் என்றும் அவர் கூறினார்.
இறுதியாக நன்றியுரை ஆற்றிய நூலாசிரியர் ஆர்.ஆர். சரத் சிங், தனது பயணம் மற்றும் வழியில் தான் கற்றுக்கொண்ட பாடங்களின் பிரதிபலிப்பே இந்நூல் என்று குறிப்பிட்டார்.
 இந்த நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.